விஜய்யின் மூன்று படங்களை இயக்கிய இயக்குநர் படம் ஒடிடியில் ரிலீஸ்..

by Chandru, Nov 30, 2020, 10:57 AM IST

விஜய் நடித்த 3 படங்களை இயக்கிய அட்லீ அந்தகாரம் என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். ரசிகர்களின் அன்புக்குரியவர்கள் தங்கள் தனித் திறமையால் பெருவெற்றியைப் பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த வகையில் இயக்குநர் அட்லியும் ஒளிப்பதிவாளர் ஷாகேயும் “அந்தகாரம்” படம் பெற்றிருக்கும் பிரமாண்ட வரவேற்பில் உணர்வுகள் பொங்கி வழியும் பூரிப்பான மனநிலையில் உள்ளனர்.கார்த்தியின் கைதி படத்தில் வில்லனாக நடித்ததுடன் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்திருக்கும் அர்ஜீன் தாஸ் முதன்முறையாகா ஹீரோவாக நடித்திருக்கும் படம் “அந்தகாரம்”.

இத்திரைப்படம் கடந்த 24ம்தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பாராட்டு பெற்றுள்ளது.இயக்குநர் அட்லீ தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் “எந்திரன்” படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்தபோது, அதே படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் எட்வின் ஷாகே. “அந்தகாரம்” படத்தை அட்லி தயாரித்திருக்க, எட்வின் ஒளிப்பதிவு செய்ததில் இருவருமே பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.
இயக்குநர், தயாரிப்பாளர் அட்லீ இது குறித்துக் கூறியதாவது:எட்வின் ஷாகே உடன் இணைந்தது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சமீபத்தில் தமிழில் மிகச்சிறந்த ஒளிப்பதிவை “அந்தகாரம்” படத்தின் மூலம் அவர் தந்துள்ளார்.

மேலும் மேலும் ஒளிப்பதிவில் அவரது அரிய சாதனைகளைக் காண ஆவலுடன் உள்ளேன். அவரின் வாழ்வு செழிக்க இன்னும் பல சாதனைகள் புரிய என் மனம்கனிந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அட்லீ கூறினார்.ஒளிப்பதிவாளர் எட்வின் ஷாகே கூறும்போது, இயக்குநர் அட்லியுடன் இணைந்து பணிபுரிந்தது பெரு மகிழ்ச்சி. “அந்தகாரம்” படத்தை தயாரித்து வழங்கியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்குள் சகோதரத்துவமான நட்புணர்வு எப்போதும் உண்டு. தற்போது எங்கள் பணிகள் கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதையும் காண மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

விஜய் நடித்த தெறி,மெர்சல் பிகில் என் 3 சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அட்லீ. பிகில் படத்தின் 2ம் பாகம் உருவாக்கவும் ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறார். இதற்கிடையில் இந்தி பிரபல நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அதிக பொருட் செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்படுகிறது. அதற்கான ஷூட்டிங்கிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஒன்றை வருடத்துக்கு கோலிவுட் பக்கம் அட்லீயை பார்ப்பது கடினம்தான். மேலும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவும் தெலுங்கு பிரபல ஹீரோக்களுடன் அட்லீ பேசி உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை