தனி கட்சி ஆரம்பிப்பது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். வழக்கம்போல் கட்சி ஆரம்பிக்கிறார் இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல்களை வராத நிலையில் சில தகவல்கள் மட்டும் தெரிய வந்துள்ளது இதன் படி, ரஜினிகாந்த் சொன்னது இதுதான் என்கிறார்கள் சிலர். நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை. அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன். சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது.
என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சிலர் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை . அதனாலேயே சிலரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறாராம். தற்போது மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாக அழைத்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பார் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை பிற்பகல் 12 மணி வாக்கில் நிறைவடைந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் முடிவு எதுவாக இருப்பினும் அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று தெரிவிக்கின்றது விடை கிடைக்கும் என்று பலரும் மேற்பட்ட நிலையில் வழக்கம் போல் தெளிவற்ற அறிவிப்பே வந்துள்ளது. எனினும் ரஜினியின் இந்த மூவ் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.