விஸ்வாசம் பட நடிகை திடீர் திருமணம்..

கொரோனா ஊரடங்கு நடிகைகளை வீட்டில் முடக்கியதுடன் திருமணப் பந்தத்திலும் இணைத்து வைத்திருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் மணந்துக் கொண்டார். அதேபோல் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகா தொழில் அதிபர் சைதன்யா ஜே வி என்பவரை மணந்தார்.

மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிரட்சி தெஹலன் தொழில் அதிபர் ரோஹித் சரோஹாவை மணந்தார். அந்த வரிசையில் தற்போது கொரோனா தளர்வில் திடீர் திருமணம் செய்திருக்கிறார் மற்றொரு நடிகை. 2015ம் ஆண்டு வெளியான படம் ட்டூரிங் டாக்கிஸ். இதில் ஹீரோயினாக நடித்தவர் பாப்ரி கோஷ். இவர் வங்காள மொழி படத்தில் நடித்து வந்தார். தமிழில் வாய்ப்பு கிடைக்கவே ஏற்றார்.

ஆனால் அவருக்குத் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வரவில்லை இதையடுத்து கிடைத்த வாய்ப்புகளை ஏற்று நடித்தார். அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் நயன்தாரா தோழியாக நடித்தார். மேலும் சர்க்கார், பைரவா மர்றும் சந்தானம் நடித்த சக்கை போடு போடு ராஜா படங்களில் நடித்தார். நாயகி, பாண்டவர் இல்லம், சித்தி 2 போன்ற டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் வேலை இல்லாமல் இருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை திருமணம் செய்யக் கேட்டனர்.

அதையேற்று திருமணத்துக்குச் சம்மதித்தார். இவரும் தொழில் அதிபர் ஒருவரைக் காதலித்து வந்தார். அவருடன் எளிமையாகத் திருமணம் நடந்தது. வங்காள முறைப்படி நடந்த திருமணத்தில் நடிகை அம்பிகா மற்றும் சில டிவி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் நண்பர்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்தாலும் டிவி சிரீயல்களில் பாப்ரி கோஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :