கர்ப்பிணி நடிகையின் தலைகீழ் யோகாசனம்.. திகில் படம்

by Chandru, Dec 1, 2020, 13:19 PM IST

தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் எச்சரிக்கயாக இருப்பார்கள். அதிக பளுதூக்கக் கூடாது, கடுமையான பணிகள் செய்யக்கூடாது. அதிர்ந்து நடக்கூடாது என பல கண்டிஷன்கள் சொல்வார்கள். சமீப காலத்தில் அதெல்லாவற்றையும் கர்ப்பிணி நடிகைகள் தூள் தூளாக்கி வருகின்றனர். நடிகை சமீரா ரெட்டி கடந்த ஆண்டு கர்ப்பமானபோது கர்ப்பிணி தோற்றத்தில் பல படங்கள் வெளியிட்டார். பிறகு நீச்சல் குளத்தில் மூழ்கி அண்டர்வாட்டர் நீச்சல் செய்தார். உடற்பயிற்சி போன்ற பல கடினமான பயிற்சிகள் செய்தார். அதேபோல் நடிகை எமி ஜாக்ஸன் கர்ப்பமானதும் வீட்டில் சும்மா உட்காராமல் ஜாகிங் செய்வது, அந்தரத்தில் தொங்கி உடற்பயிற்சி செய்வது, யோகாசனம் செய்வது என பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

நடிகர் நகுல் தனது கர்ப்பிணி மனைவியை தண்ணீர் டப்பில் படுக்க வைத்து பிரசவம் பார்த்தார். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் என்று அவர்கள் செயல்முறையில் நிரூபித்து காட்டினர். தற்போது நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறார். கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் விராத் கோஹ்லியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அனுஷ்கா கர்ப்பமானதும் தான் விரைவில் தந்தை ஆகவுள்ளதாக விராத் மெஜேச் பகிர்ந்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். அனுஷ்கா சர்மா கர்ப்பமான தோற்றத்தில் நீந்துவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்.

தற்போது சுவற்றில் முட்டுக்கொடுத்த படி தலைகீழாக செங்குத்தாக நிற்கும் யோகாசனம் செய்து அதிர்ச்சி தந்திருக்கிறார். தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மாவின் கால்களை நின்ற படி பிடித்துக்கொண்டு அவருக்கு உதவினார் விராத் கோஹ்லி. இப்படம் நெட்டில் வைராலாகி உள்ளது. இதுபற்றி அனுஷ்கா சர்மா கூறும்போது, நான் பல ஆண்டுகளாக யோகசம் செய்து வருகிறேன். ஒருநாளும் நிறுத்தியதில்லை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் யோகா செய்வதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை கேட்டேன். என்னென்ன யோகாசனம் செய்தீர்களோ அதை தொடர்ந்து செய்யலாம் என்றார். கைகள் கீழே தொட கால்கள் உயரத்தில் நிற்கும் தலைகீழ் ஆசனம் செய்தேன் என்னுடைய யோகாசன டீச்சர் மேற்பார்வையில் இதனை செய்தேன். எனக்கு கணவர் உதவினார் என்றார்.

You'r reading கர்ப்பிணி நடிகையின் தலைகீழ் யோகாசனம்.. திகில் படம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை