ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் புகழ் அபிராமி..

by Logeswari, Dec 1, 2020, 20:18 PM IST

தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடமாக மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியில் பல சீசனாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியிலும் தெலுங்கு மொழியிலும் பிக் பாஸ் ஒன்றாக தான் தொடங்கப்பட்டது. தொடங்கும் பொழுது பல வித விமர்சனங்களை சந்தித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பின் மக்களிடையே நல்ல வரவேற்பை அடைந்தது. சாண்டி மாஸ்டரின் காமெடிக்கு பெயர் போனது தான் பிக் பாஸ் சீசன் 3. இதில் அபிராமியும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக நுழைந்தார்.

முதலில் கவின் மேலே ஒரு ஈர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.அதனை கவினிடையே நேராகவும் கூறினார். பின்பு நாட்கள் செல்ல செல்ல முகேன் நடக்கும் பாதையில் நடந்து கொண்டிருந்தார். இருவரும் காதலிப்பது போல் சில விஷயங்கள் அரங்கேறியது. ஆனால் வெளியே காமித்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் வீட்டிற்குள் இருக்கும் பொழுதே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது.

அதன் பின் ஒரு கட்டத்தில் மக்களிடையே குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகு ஒரு சில போட்டோஷூட் செய்தார். எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. இந்நிலையில் இன்று இவரது வெளியான புகைப்படத்தை பார்க்கும் பொழுது பிக் பாஸில் இருந்த அபிக்கும் இப்ப இருக்கும் அபிக்கும் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். பயங்கரமாக எடை போட்டு கியூட்டான பொம்மை போல் இருக்கிறார்.இதனால் இவரை நெட்டிசன்கள் வெச்சி செய்து வருகின்றனர்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்