நடிகை நெஞ்சில் குத்திய சூலாயுதம்..

by Chandru, Dec 2, 2020, 10:38 AM IST

தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், வெடி, என் வழி தனி வழி போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் பூனம் கவுர். இவர் கடந்த சில ஆண்டுகளாகச் சர்ச்சையில் சிக்கினார். இயக்குனர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர் பின்னர் அவருடன் மோதல் ஏற்பட்டது. இதில் தற்கொலை எண்ணத்துக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.

இதுபற்றி பூனம் கூறும்போது,நான் மன அழுத்தத்துடன் போராடுகிறேன். அடையாளத்தை வெளிப்படுத்த முடியவில்லை. திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங் கள் மற்றும் பல வாய்ப்புகளை இழந்துவிட்டேன். என் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணம் ஏற்பட்டது. இதிலிருந்து மீள்வதற்காக நான் குருஜி என்றழைக்கும் குறிப்பிட்ட இயக்குனரிடம் என் நண்பர் மூலம் எனது நிலையை விளக்கினேன். அதுவும் ஒருமுறை அல்ல இரண்டு முறை இயக்குனரை அணுகி பூனமிற்கு உடல் நிலை சரியில்லை. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் நண்பர் இயக்குனரிடம் எடுத்துக் கூறினார்.

ஆனால் அவர் தாமதம் செய்யும் பாணியை கடைப்பிடித்தார். இதனால் நானே இயக்குனரிடம் கேட்டேன். தற்கொலை எண்ணமாக இருக்கிறது என்றேன். அதற்கு அந்த இயக்குனர் நீ தற்கொலை செய்துகொண்டால் அது ஒரு நாள் செய்தி என்றார். அவரது பேச்சிலிருந்து அவர் தப்பிக்கும் எண்ணம் தெரிந்தது. வலிமையான அந்த இயக்குனரிடம் மீண்டும் பேச எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆன்லைனில் என்னைப்பற்றி அவர் மறைமுகமாக எழுதியது என் மனச்சோர்வை அதிகரித்தது. அவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகார பலத்தை வைத்து இதை எல்லாம் செய்கிறார். நான் இறந்தால் அது ஒருநாள் செய்தியாக முடியும். அந்த சமயத்தில்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் என்னைத் திடுக்கிட வைத்தது, அவரைப்போல முடிவடைய விரும்பவில்லை என்று கூறினார் பூனம் கவுர். தன் மனதை இந்தளவுக்குப் பாதிக்கச் செய்த இயக்குனர் யார் என்பதை வெளிப்படையாக பெயரைச் சொல்லவில்லை. பின்னர் தனது மனச்சோர்வுக்கு அவர் டாக்டரிடம் சிக்கிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டார்.

தற்போது பூனம் ஆன்மிகத்தில் கவனம் செலுத்துகிறார். அத்துடன் தனது பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். தான் மனச்சோர்விலிருந்து மீண்டதை உணர்த்தும் வகையில் சமீப காலமாகத் தனது இணைய தளத்தில் மீண்டும் ஆக்டிவாகி இருக்கிறார். தற்போது தெலுங்கு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கிறது. அதில் ஓட்டளித்து விட்டு வந்தவர் புகைப்படங்களுக்கு போஸ் அளித்தார். பின்னர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது நெஞ்சில் சூலாயுதமும். பாம்பும் இணைந்ததுபோன்ற ஒரு டாட்டூ குத்தியிருப்பதைப் படம் வெளியிட்டு விளக்கினார். தான் ஆன்மிகத்தில் இருப்பதையும் சக்தியுடன் இருப்பதையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தை பூனம் வெளியிட்டிருக்கிறார். தற்போதைக்கு பூனமிற்கு கைவசம் புதிய படங்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே அவர் நடித்து வந்த படங்கள் முடிவடையத் தாமதமாகி வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை