ஹீரோவுடன் காதல் முறிந்த நடிகைக்கு வேறு நடிகருடன் காதல்..

by Chandru, Dec 2, 2020, 10:47 AM IST

சில நடிகர் நடிகைகள் டேட்டிங் என்ற பெயரில் ஜோடியாக ஊர் சுற்றுவது ரெஸார்ட் சென்று தங்குவது, வெளிநாடு டூர் என்று வருடக் கணக்கில் ஜாலியாக அனுபவிக்கின்றனர். திருமண பேச்சு வரை அது தொடர்கிறது. திடீரென்று காதலை முறித்துக் கொண்டு பிரிகின்றனர். இப்படித்தான் இந்தி நடிகர் ரன்பீர் கபூர்- கேத்ரினா கைய்ப் இருவரும் வருடக் கணக்கில் டேட்டிங் செய்தார்கள். லிவிங் டுகெதர் பாணியில் ஜோடியாக ஒரே வீட்டில் தங்கி இருந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக ரன்பீர் கபூர் கேத்ரினாவுடான காதலை முறித்துக் கொண்டார்.

இதில் வேதனை அடைந்தவர் படப்பிடிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். தான் நடிக்கும் படத்தில் காதல் காட்சி வந்தால் தனது நிஜ காதல் முறிவை எண்ணிக் கலங்கினார். ஒரு வருடமாக இந்த வேதனையில் இருந்தவர் பிறகு மனதைத் தேற்றிக் கொண்டு படங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுடன் கேத்ரினாவுக்கு நட்பு ஏற்பட்டது. அது டேட்டிங் வரை சென்றிருக்கிறது. பார்ட்டிகளுக்கு ஜோடியாகச் சென்று வந்தவர்கள் பிறகு ஜோடியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தங்களது டேட்டிங்கை அடுத்த கட்டத்துக்கு அதாவது காதலாக இந்த ஜோடி மாற்றி வருகிறது.

இந்நிலையில் கேத்ரினா-விக்கி இருவரும் ஜோடியாகப் பாலிவுட் இயக்குனர் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வீட்டுக்கு காரில் சென்று ஆலோசனையில் ஈடுபட்டனர். கேத்ரினா ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்திருந்தார். அவர்கள் கரண் ஜோஹர் வீட்டுக்குச் சென்று வந்ததை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் படம் எடுத்து நெட்டில் வெளியிட்டனர்.கடந்த ஆண்டு தீபாவளி முதலே கேத்ரினா, விக்கி காதல் பற்றி கிசுகிசு பரவி வருகிறது. ஆனால் தங்களின் உறவு பற்றி இருவரும் மவுனம் சாதித்து வருகின்றனர். கேத்ரினா புதிய காதலனைத் தேடிக்கொண்டது போல் இவரது மாஜி காதலன் ரன்பீர் கபூர் புதிய காதலியைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்தி நடிகை அலியாபட்டுடன் ரன்பீர் நெருக்கமாக இருக்கிறார். இவரும் காதலிப்பதுடன் திருமணத்துக்கும் இரண்டு குடும்பமும் கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறது. இந்த டிசம்பர் மாதத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் ரன்பீர் தந்தை ரிஷிகபூர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். இதனால் இவர்கள் திருமண பேச்சு சைலண்ட் மோடில் இருக்கிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்