சைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் செல்போன் கொள்ளை..

by Chandru, Dec 2, 2020, 14:00 PM IST

பிரபல நடிகர் கார்த்திக் இவரது மகன் நடிகர் கவுதம் கார்த்திக். கடைசியாக 'தேவராட்டம்' படத்தில் நடித்த நடிகர் கவுதம் கார்த்திக், இன்று அதிகாலை கவுதம் கார்த்திக் தனது வீட்டு பகுதியில் டிடிகே சாலையில் சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டூ வீலரில் அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் அவரிடமிருந்து செல்போன் கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மைலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதிகாலையில், கவுதம் கார்த்திக் தனது மொபைல் தொலைபேசியுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கவுதமிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

விரைவில் வெற்றிபெற்ற கன்னட படமான 'முப்தி' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் கவுதம் கார்த்திக். இதற்கிடையில் கவுதம் கார்த்திக் மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் க்ரைம் த்ரில்லர் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். எஸ்.எழில் இயக்குகிறார். ராஜேஷ் குமார் எழுதிய நாவலை மயமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் புதுமுகம் சைப்ரியா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில், அண்ணா நகரில் சிந்தாமணி சிக்னலுக்கு அருகே சைக்கிள் ஓட்டும் போது நடிகை சஞ்சனா சிங்கி மொபைல்போனை கொள்ளையடித்த சம்பவம் நடந்தது குறிபிடத்தக்கது.

You'r reading சைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் செல்போன் கொள்ளை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை