பிரபல நடிகை டிவிட்டர், இன்ஸ்டா கணக்கு முடக்கம்.. ஹேக்கர்கள் கைவரிசை..

by Chandru, Dec 3, 2020, 11:41 AM IST

சமூக வலைத்தள பக்கங்கள் பாதுகாக்கப்பட்டது என்று தகவல்கள் வந்தாலும் அதில் அடிக்கடி ஹேக்கர்கள் புகுந்து விடுகின்றனர். பல நடிகர், நடிகைகளின் சமூக வலைத் தள கணக்குக்களில் இதுபோல் சம்பவங்கள் நடந்துள்ளன. நடிகை சமந்தா பற்றி நடிகை பூஜா ஹெக்டேவின் சமூக வலைத் தள பக்கத்தில் ஒரு தகவல் வெளியானது. சமந்தாவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இவர் ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைக்கண்டு கொதிப்படைந்த சமந்தா ரசிகர்கள் பூஜாவை தாறுமாறாகத் திட்டத் தொடங்கினர். இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் வலைத்தளத்தில் மோதிக் கொண்டனர். இது பரபரப்பானது. இதற்குப் பதில் அளித்த பூஜா ஹெக்டே, சமந்தா பற்றிய பதிவை நான் வெளியிடவில்லை எனது வலைத்தள கணக்கில் ஹேக்கர்கள் புகுந்து இப்படிச் செய்திருக்கிறார்கள் என்றார். அதன்பிறகு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சில நடிகர்கள் சமூக வலைத் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகக் கணக்கு வைக்காவிட்டாலும் அவர்கள் பெயரில் போலியான கணக்குகள் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் போலீஸிலும் புகார் அளித்திருக்கின்றனர். சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைத் தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தற்போது அவரது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது,என்னுடைய சமூக வலைத் தள கணக்குகள் இன்ஸ்டாகிராம். டிவிட்டரை யாரோ ஹேக்கர்கள் நேற்று இரவு முதல் முடக்கி இருக்கிறார்கள். என்னால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.

இதுதொடர்பாக குழுவுடன் இணைந்து அதை மீட்கும் முயற்சி நடக்கிறது. விரைவில் மீட்கப்படும் அல்லது ஒரு சில நாட்கள் ஆகலாம். என்னுடைய கணக்குகள் மீட்கப்பட்டதும் அதுபற்றி நான் தெரிவிக்கிறேன். அதுவரை எனது இணைய தள பக்கத்திலிருந்து யாராவது தகவல்கள் வெளியிடக்கூடும் அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன் என்றார்.வரலட்சுமி தற்போது சேசிங், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ். யானை மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை