பாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் 3 புதிய படம்.. முதலில் வரப்போவது எது தெரியுமா?

by Chandru, Dec 3, 2020, 11:33 AM IST

நடிகர் பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஒம் ராவுத் இயக்கும் ஆதி புருஷ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பிரபாஸ். இது ராமாயண புராண பின்னணி கதையாக உருவாக உள்ளது. இப்படம் 2021ம் ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கே ஜி எப் படத்தை இயக்கி பிரஷான்த் நீல் இயக்கும் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.

சமீபத்தில் ஒப்புக்கொண்ட படமாக இருந்தாலும் இப்படம் தான் முதலில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. காரணம் இப்படத்தின் படப் பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் முடிக்கப்பட உள்ளது. ராதே ஷ்யாம் காதல் பின்னணியில் அமைக்கப்பட்ட கதை, ஆதிபுருஷ் புராண பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரபாஸுக்கு ஆக்‌ஷன் படம் ஒன்று அவசியம் தேவைப்படுகிறது. அந்த வகையில் சலார் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறது.

மேலும் ஆதி புருஷ் படத்தில் கிராபிக்ஸ் பணிகள்தான் அதிகம். பிரபாஸ் கால்ஷீட் 2 மாத மட்டுமே தேவைப்படுகிறது. அடுத்த 10 மாதங்கள் கிராபிக்ஸ் பணிகள் நடந்து 2022ம் ஆண்டு படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.பிரபாஸ் - பிரஷான்த் நீல் இணையும் 'சலார்' பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம் பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைப் பிரம்மாண்ட மாகத் தயாரித்து வருகிறது.ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான 'டார்லிங்' பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப்' படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்து விட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் "ஆம், அது உண்மைதான். பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப் பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஹொம்பாளே பிலிம்ஸ் தங்கள் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது. ''சலார் ' படத்தை நாடு முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தயாரிப்பின் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ஹொம்பா ளே பிலிம்ஸ். இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டதில்லை.

'கே.ஜி.எஃப் சேப்டர் 1', 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் - பிரஷான்த் நீல் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்திய அளவில் அடுத்ததொரு பிரம்மாண்ட படைப்பு ரசிகர்களின் விருந்துக்காகத் தயாராகவுள்ளது.சலார் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்