பாலிவுட் ஹீரோயினுக்காக புனே செல்லும் பிரபல இயக்குனர்..

by Chandru, Dec 4, 2020, 10:13 AM IST

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பல்வேறு தடங்கள் ஏற்பட்டன. பட ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவருக்கும் படத்துக்காகப் பயிற்சியில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து காயம் அடைந்தனர். இதனால் மாதக் கணக்கில் படக் குழு காத்திருந்தது.

பின்னர் படத்துக்காகப் போடப்பட்ட அரங்கம் திடீரென்று தீ பிடித்தது. அதையெல்லாம் கடந்து வந்து ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு அமலானது. இதனால் 6 மாதத்துக்கும் மேலாக ஷூட்டிங் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எல்லாம் முடிந்து படப்பிடிப்பில் மீண்டும் தொடங்க திட்டமிட்ட நிலையில் இயக்குனர் ராஜமவுலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்.

இதையடுத்து புதிய ஷெட்யூல் திட்டமிடப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கியது. படத்திலிருந்து ஜூனியர் என் டி ஆர் டீஸர் வெளியிடப்பட்டது. அதில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி அணிந்ததற்கு ஆதிவாசிகளும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக உருவானது. குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் ராஜமவுலியை தாக்குவோம், தியேட்டர்கள் தீயில் எரியும் யார் தீ வைத்தார்கள் என்பது தெரியாது என மிரட்டல்கள் விடப்பட்டன. இதற்கிடையில் படத்தில் நடிக்கும் அலியாபட் காட்சி ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் திட்டமிடப்பட்டிருந்தது. அது தள்ளி வைக்கப்பட்டது. அலியாபட்டும் படப்பிடிப்பில் பங்கேற்க பல்வேறு கண்டிஷன்கள் விதித்திருந்தார்.இதற்கிடையில் ராம் சரண், ஜூனியர் என் டிஆர் நடிக்கும் முக்கிய காட்சிகளின் 50 நாள் படப்பிடிப்பை படக் குழு ஐதராபாத்தில் சமீபத்தில் நடத்தி முடித்தது. அடுத்த கட்டமாகக் குறுகிய ஷெட்யூல் ஒன்றை படக் குழு திட்டமிட்டது.

மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் அழகிய லொகேஷனில் இதன் படப் பிடிப்பு நடக்கிறது. ராம் சரண் நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. இதற்காகப் படக் குழு மகாபலேஷ்வர் பகுதிக்குச் சென்று லொகேஷனை பார்வையிட்டது. நீண்டு வளர்ந்து காய்ந்த கோரை புற்கள் நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த லோகேஷனை படக் குழு வீடியோவாக எடுத்து வெளியிட்டது. இங்குப் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு புனாவுக்கு படக் குழு செல்கிறது அங்கு ராம் சரண், அலியாபட் நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. அலியாபட் ஐதராபாத் வருவதில் சிக்கல் இருந்ததால் படக் குழுவே தற்போது தங்கள் திட்டத்தை மாற்றி புனேவுக்கு சென்று அலியாபட் காட்சிகளை படமாக்க உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை