நடிகை திருமணத்தில் நடனமாடும் மெகா ஸ்டார்..

by Chandru, Dec 4, 2020, 10:37 AM IST

பெரிய இடத்துத் திருமணங்கள் ஒரு நாள் கூத்தாக முடிவதில்லை. திருமணத்துக்கு முன்பாக ஆட்டம் பாட்டம் என பார்ட்டிகள், மெஹந்தி விழா என களைகட்டும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் அதெல்லாம் சுருக்கப்பட்டு எளிமையாகத் திருமணம் நடந்து முடிகிறது. ஆனால் நடிகை நிகாஹரிகா திருமணம் தடபுடலாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. நிஹாரிகா நடிகர் சிரஞ்சிவீயின் அண்ணன் நாகபாபுவின் மகள் ஆவார். தமிழில் விஜய் சேது பதி நடித்த, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். பிறகு சில தெலுங் படங்களில் நடித்தார்.

நிஹாரிக்கும் தொழில் அதிபர் சைதன்யா வி ஜேவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது, இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஓபாராய் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக பணத்தை வாரி இறைத்து ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன திருமண ஏற்பாடு களை கவனிக்க நிஹாரிகா முன்னரே அங்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

நிஹாரிகா திருமணத்துக்கான விழாக்கள் தொடங்கி உள்ளன. சங்கீத் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளார். அதேபோல் நிஹாரிகா, சைதான்யாவும் நடனம் ஆட பயிற்சி செய்து வருகின்றனர். இது தவிர அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டுப் பாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெரியவர்கள் முதல் குட்டீஸ் வரை இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாடல் பயிற்சி செய்யும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையில் சிரஞ்சீவி தனது ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்கவும் எண்ணி உள்ளார் சிரஞ்சீவி. கடந்த 2 வாரத்துக்கு முன் ஆச்சார்யா படப்பிடிப்புக்காகச் சிரஞ்சீவி பங்கேற்கச் சென்றார்.

முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பதாக ரிசல்ட் வந்தது. ஆனால் மற்றொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்குத் தொற்று எதுவும் இல்லை. உடல்நிலையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரியவந்தது. ஆனாலும் அவர் தனிமைப்படுத்தலில் இருக்க சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டதால் தனிமைப்படுத்தலில் இருந்தார். தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார். அவர் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கி வருகிறார் இயக்குனர் கொரடாலா சிவா. இந்த காட்சிகளை முடித்துவிட்டு நிஹாரிகா திருமண விழாவில் பங்கேற்க ராஜஸ்தான் புறப்பட்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார் சிரஞ்சீவி.

More Cinema News


அண்மைய செய்திகள்