கோலிவுட் நடிகைகள் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர்கள் விஷால், கருணாஸ் போன்றவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். அதேபோல் நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் மும்பை வீட்டில் தங்கியிருந்து உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் சத்தான உணவுவகைகளை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் அவரது பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமன்னாவுக்கு பரிசோதித்தபோது அவருக்கு தொற்று இல்லை என்பது தெரிந்தது. தமன்னா பெற்றோர் தங்களை தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். பின்னர் சில வாரங்கள் கழித்து தமன்னா படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார். அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் மும்பை புறப்பட்டு சென்று தனிமைப்படுத்திக் கொண்டார். அங்கு சிகிச்சையை தொடர்ந்தார். பின்னர் வீடு திரும்பிய அவரை குடும்பத்தினர் வரவேற்றனர். அடுத்த நாளிலிருந்து தமன்னா உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் செய்யச் தொடங்கினார். அதனை வீடியோவாக வெளியிட்டார். பெற்றோர் மற்றும் செல்லப் பிராணியுடன் நேரத்தை செலவிட்டார், அத்துடன் ஓய்வில் இருந்தார். மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்று பணிகளை தொடர முடிவு செய்தார். இதையடுத்து தமன்னா நேற்று மும்பையிலிருந்து ஐதராபாத் வந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறும் போது ஸ்டைலான கவர்ச்சி உடையுடன் வந்தார்.
வாழைத் தண்டு கால்கள் பளபளக்க ஷார்ட்ஸ் அணிந்த்திருந்தவர் பச்சை நிற டிஷர்ட் உடுத்தி இருந்தார். கையில் டெனிம் ஜாக்கெட்டை சுமந்து வந்தார். மற்றும் சாம்பல் அச்சுடன் வெள்ளை முககவசம் அணிந்திருந்தார். தலைமுடியை காற்றில் பறக்கவிட்டு அழகு தேவதையாக வந்த தமன்னாவை அங்கிருந்தவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். கையில் ஒரு கருப்பு ஹேண்ட் பேக்கும் வைத்திருந்தார். தமன்னா விரைவில் சம்பத் நந்தியின் சீட்டிமாரில் நடிக்கிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. கபடியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு பின்னணி கதையாக இது உருவாகிறது. வ கோபிசந்த் மற்றும் திகங்கனா சூரிய வன்ஷி ஹீரோக்களாக நடிக்கின்றனர். நாகசேகர் இயக்கும் குருதுண்ட சீதகலம் படத்தில் சத்யதேவ் உடன் இணைந்து நடிக்கிறார் தமன்னா.