கல்யாணம் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை கிடையாது.. பிரபல நடிகை முடிவு..

by Chandru, Dec 4, 2020, 14:53 PM IST

திரையுலகம் கவர்ச்சி உலகம். இங்கு நடிக்கும் பல நடிகைகள் கவர்ச்சி காட்டத் தயங்குவதில்லை. ஆனால் நஸ்ரியா, சுப்ரமணியபுரம் சுவாதி போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சில நடிகைகள் கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தனர். இதனால் அவர்களுக்குப் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. இருவருமே தற்போது திருமணம் ஆகி இல்லறத்தில் செட்டிலாகிவிட்டனர். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிடுகிறார்.

நடிகை சமந்தா நாக சைதன்யாவை மணந்த பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அவர் கவர்ச்சிக்குத் தடை சொல்வதில்லை.இதனால் அவருக்குப் பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நடிகை நயன்தாரா ஆரம்பக்கால கட்டத்தில் கவர்ச்சியாக நடித்து வந்தார். அஜீத்தின் பில்லா போன்ற சில படங்களில் நீச்சல் உடை அணிந்தும் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்த பிறகு கவர்ச்சி நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.

சமந்தா பாணியில் தற்போது காஜல் அகர்வால் கவர்ச்சிக்குத் தடைபோட விரும்பவில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம். தெலுங்கில் பல படங்களில் பாடல் காட்சிகளில் படு கவர்ச்சியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இதனால் சக நடிகைகளுடன் போட்டிக் களத்தில் மோத முடிந்ததுடன் தனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்தார். சமீபத்தில் காஜல் அகர்வால் தனது பாய்ஃ பிரண்ட் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிகைகளின் மவுசு குறைந்து விடும் என்ற பார்முளா சினிமாவில் உள்ளது. அவர்கள் பல கண்டிஷன்கள் விதிப்பார்கள் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன், முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கண்டிஷன்கள் போடுவதுண்டு.

ஆனால் காஜலை பொருத்தவரை இதில் தெளிவாக இருக்கிறாராம். கவர்ச்சிக்கு எந்தவித தடையும் கிடையாது பாடல் காட்சிகளில் தேவைப்படும் அளவுக்குக் கவர்ச்சியாக நடிக்கத் தயக்கம் கிடையாது, அதே போல் மற்ற காட்சிகளுக்கும் எந்தவித கண்டிஷன்களும் கிடையாது என்று இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளாராம்.காஜல் அகர்வால் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் நடிக்கிறார். பிறகு இந்தியன் 2வில் கமலுடனும் டிகே இயக்கத்தில் திகில் படமொன்றிலும் நடிக்க உள்ளார். கவர்ச்சிக்குத் தடை இல்லாததால் காஜலுக்கு மேலும் பட வாய்ப்புகள் வருகிறது. அதில் நடிப்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

You'r reading கல்யாணம் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை கிடையாது.. பிரபல நடிகை முடிவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை