இளையராஜாவிடம் பாடல் பாடிக்காட்டிய பிபிசி தேர்வு பாடகி..

by Chandru, Dec 4, 2020, 15:00 PM IST

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசை வாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால் பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

இந்த தகவலை அறிந்த இசை ஞானி இளையராஜா, இசை வாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைவாணியை பாடச்சொல்லி பொறுமையாக ரசித்துக் கேட்டிருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களைப் பாடிக் காண்பித்திருக்கிறார் இசை வாணி.

மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்தார் இளையராஜா.இன்னும் இதுபோல் பல சாதனைகள் படைக்க இசை வாணிக்கும், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்களைக் கூறியதாகவும் மிகுந்த உற்சாகத்தோடு கூறினார் இசை வாணி.அட்டகத்தி, கபாலி, காலா போன்ற ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் படங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறார். அதுபோன்ற கதை அம்சம் கொண்ட பரியேறும் பெருமாள் போன்ற படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பா ரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவும் ஒருபக்கம் சாதனைகள் படைத்து வருகிறது. அந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்தான் இசை வாணி என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இளையராஜாவிடம் பாடல் பாடிக்காட்டிய பிபிசி தேர்வு பாடகி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை