தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் தான் அஞ்சலி. இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் என பல திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். பெரிய இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் ஜெய் நடித்த பலூன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் அஞ்சலி பேயாக மாறி கொலையில் சம்மந்தப்பட்டவர்களை பழிவாங்கும் பெண்ணாக நடித்திருப்பார். சில வருடம் சினிமாவில் மார்க்கெட் இழந்து காணப்பட்டார். ஓடிடியில் வெளியாகவுள்ள 'பாவக் கதைகள்' என்ற 4 பகுதி திரைப்படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இத்திரைப்படம் காதல்,பாசம் என்று இல்லாமல் ஒரு புதிய பாணியில் கதை அமைந்துள்ளது.
அதாவது அஞ்சலி மற்றும் கல்கி ஆகிய இரண்டு பேரும் லெஸ்பியனாக வாழ்கிறார்கள். இதனால் என்ன சர்ச்சைகள் உண்டாகிறது மற்றும் பெத்த பிள்ளைகள் என்று கூட பாராமல் அப்பாக்களே கெளரவ கொலை செய்கின்றனர். இப்படத்தில் அஞ்சலி படு ஆபாசமாக நடிக்கிறார் என்ற தகவலும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்க அஞ்சலி உடல் எடையை குறைத்துள்ளாராம். இதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு பல பிரச்சனைகளை சந்திக்கும் என்று இணையத்தளத்தில் பரவி வருகிறது. சிலர் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இப்படி நடிக்க முடிவு எடுத்துவிட்டாரோ என்று கூறிவருகின்றனர்.