திரையுலகில் சில நடிகைகள் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டுகின்றனர். நடிகை நயன்தாரா கிறிஸ்தவராக இருந்தாலும் கடந்த 2 வருடத்துக்கு முன் காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சில கோயில்களுக்கு நேரில் சென்று பக்தர்களோடு பக்தராக இருந்து சாமி தரிசனம் செய்தார். அதேபோல் நடிகை அனுஷ்காவும் 2 வருடத்துக்கு முன்பு வட நாட்டு கோயில்களுக்குச் சென்று வழிபட்டு பிரார்த்தனை சிறப்புப் பூஜைகள் நடத்தினார். திருமண தடை விலக வேண்டும் என்று அவர் கோயில்களுக்கு சென்றதாக அப்போது கூறப்பட்டது.
நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும், விதார்த்துடன் கொலைகாரன் மற்றும் என்னோடு விளையாடு, ரம். பார்ட்டி போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா ஷெட்டி. இவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது. பிறமொழி பட வாய்ப்புகளும் வரவில்லை. இந்த நிலையில் மனதை ஒருநிலைப்படுத்த ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வாரம் அவர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, பாலாஜி பிறந்த தலமான கோயிலுக்குச் சென்றேன். சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனம் செய்தேன். அன்பையும் பாசிடிவிட்டியையும் பரப்புவோம் என ஹேஷ் டேக் பகிர்ந்திருந்தார். முன்னதாக அவர் வீட்டில் லட்சுமி துர்கா சிறப்பு பூஜை செய்து அதன் வீடியோவை வெளியிட்டார்.இந்நிலையில் கார்த்திகை தீபம் மறுநாள் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். பின்னர் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் மலை உச்சிக்குச் சென்றார். அங்குத் தீபம் அருகில் நின்று கும்பிட்டவர் பிறகு சிவன் பாதம் பதிந்த இடத்தில் வழிபட்டார்.
இதுகுறித்த படம் வீடியோவை பகிர்ந்திருக்கும் சஞ்சிதா கூறியிருப்பதாவது:
அதிசயம் நிறைந்த திருவண்ணாமலை. 2871 அடி உயரம் கொண்ட மலையின் உச்சிக்கு ஏறிச் சென்றேன். இது உண்மையிலேயே சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. மலையின் உச்சிக்குச் சென்றடைய 1 மணி 40 நிமிடம் ஆனது. கீழே இறங்கி வர 2 மணி 30 நிமிடம் ஆனது. இதில் ஆங்காங்கு இளைப்பாறிய நேரமும் அடங்கும். தீப தரிசனம் பெற உதவியவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.