ஐஸ்வர்யா ராய் நடனம் ஆடிய எகிப்து பிரமீடில் மாடல் அழகி கைது.. போலீஸ் நடவடிக்கை..

Advertisement

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது எகிப்து பிரமீட்கள். இதைக் கட்டியது யார் என்ற கேள்வி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. வேற்றுகிரக வாசிகள் வந்து கட்டியதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது. அதில் எகிப்திய மன்னர்கள் இறத்த பிறகு அவர்கள் அணிந்திருந்த உடை, நகைகள் போன்றவற்றுடன் புதைத்திருப்பதால் அங்கு பல ஆயிரக் கோடி மதிப்பிலான நவரத்தினங்கள் இருப்பதாகவும் பல கதைகள் கூறப்படுகிறது. எகிப்தியர்கள் பிரமீடை தங்கள் நாட்டின் அடையாளமாக மட்டுமல்லாமல் அதைப் புனிதமாகப் போற்றுகின்றனர்.

அப்பகுதிக்குச் செல்லவும் படப் பிடிப்பு நடத்தவும் பல கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யாராய் நடித்த ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்று பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிகூட்டம் அதிசயம் என்ற பாடலுக்கு உலகின் எட்டு அதிசயங்களில் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் எகிப்த் பிரமீட் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நடனம் ஆடி பாடி நடித்த காட்சி அங்கு படமாக்கப்பட்டது.

இதற்காக எகிப்திய கலாச்சாரப்படி அவர்களுக்கு காஸ்டியூம் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் சமீபத்தில் மாடல் அழகி ஒருவரின் படப்பிடிப்பு நடந்தது. அவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். எகிப்திய மாடல் அழகி நடன மற்றும் கலைஞர் சல்மா அல்-சிமி. இவர் டிஜோசர் பிரமீட் பகுதியில் எகிப்திய அழகி போல் காஸ்ட்யூம் அணிந்து புகைப்படம் எடுத்ததுடன் வீடியோ காட்சிகளும் பதிவு செய்தார். பிறகு அதனைத் தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையானது. எகிப்து பாரம்பரிய உடை என்ற பெயரில் மாடல் அழகி கவர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் 4700 வருடம் பாரம்பரியம் கொண்ட பிரமீட்டை அவமதித்திருக்கிறார் என்று சொல்லி அவரை எகிப்திய போலீஸார் அவரை கைது செய்தனர். அதேபோல் அவரை அங்குப் புகைப்படம் வீடியோ எடுத்த வரும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். ஆர்காலஜிக்கல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியது, எகிப்திய உடை என்ற பெயரில் கவர்ச்சியாக உடை அணிந்தது என இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>