சமந்தாவை பயிற்சி செய்ய விடாமல் செய்யும் ஹாஷ்..

by Chandru, Dec 5, 2020, 10:38 AM IST

நடிகை சமந்தா கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தாலும் கணவர் நாக சைதன்யா வுடன் தங்கி இருந்தார். தினமும் உடற்பயிற்சி செய்து வந்ததுடன் கிரியா யோகாசன பயிற்சி, காஸ்டியூம் டிசைன் , சத்தான உணவு தயாரிப்பது போன்றவற்றை முறைப்படி கற்றுக்கொண்டார். மேலும் ரூஃப் கார்டன் எனப்படும் மாடி தோட்டம் அமைத்தார். அடிக்கடி நாக சைதன்யாவுடன் மோட்டார் சைக்கிளில் ஷாப்பிங் சென்று வந்தார். அத்துடன் தான் வாங்கி வந்த செல்ல நாய்க்குட்டி ஹாஷ்வுடன் அதிக நேரம் செலவிட்டார்.

ஊரடங்கு தளர்வில் சமந்தா கணவருடன் மாலத்தீவுக்கு விடுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு 2 வாரம் தங்கி இருந்து கடலுக்கு அடியில் நீந்தும் ஸ்கூபா டைவிங் செய்ததுடன் உல்லாசமாக விடுதியிலும், நீச்சல் குளத்திலும் பொழுதை கழித்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாலத்தீவுக்கு நடிகைகள் பட்டாளம் விடுமுறை பயணமாக சென்று குவிந்தனர்.

காஜல் அகர்வால் கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் சென்று ஒரு மாதம் தேனிலவு கொண்டாடினார். நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங். வேதிகா, பிரணிதா, சோனக்‌ஷி சின்ஹா போன்றவர்கள் மாலத்தீவில் நீச்சல் உடையில் சுற்றித்திரிந்தனர். அந்த படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக இணைய தள பக்கத்தில் பகிர்ந்தனர். பயணம் முடிந்து சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் ஊர் திரும்பி அடுத்த கட்டமாகப் படப்பிடிப்புக்குத் தயாரானார்கள்.நடிகை சமந்தாவைப் பொறுத்த வரை உடற்பயிற்சியில் கவனமாக இருப்பார். ஆனால் கடந்த 2 வருடமாக அதில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். காரணம் அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி ஹாஷ்தான். அதனுடன் நேரம் செலவழிப்பதிலேயே சமந்தாவுக்கு பொழுதுபோய் விடுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை. வீட்டுக்குள் சமந்தா எங்கு சென்றாலும் அவர் கூடவே சுற்றி வருகிறது.

நாய் குட்டிக்கு 2 வயது ஆன நிலையில் மீண்டும் உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்த சமந்தா முயன்று வருகிறார். அவர் பயிற்சிக்காக மைதானத்துக்குச் சென்றால் அங்கும் வந்துவிடுகிறது ஹாஷ். இரும்பாலான கனமான வெயிட்டை தூக்கி சமந்தா பயிற்சி செய்ய முயன்றபோது ஹாஷ் குறுக்கே புகுந்தது. இதில் அவர் வெயிட்டை தூர எறிந்தார். அதனைத் தனது இணைய தள பக்கத்தில் சமந்தா பகிர்ந்திருக்கிறார். சமந்தா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக நடிக்கின்றனர். நயன்தாராவுடன் சமந்தா முதன்முறையாக இணைந்து இப்படத்தில் நடிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை