சீனியர் ஹீரோவுடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகையால் பரபரப்பு..

by Chandru, Dec 5, 2020, 14:09 PM IST

சீனியர் ஹீரோக்களுக்கு நடிகைகளை ஜோடி சேர்ப்பது இயக்குனர்களுக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதனால் கோலிவுட்டில் தேடாமல் பாலிவுட் பக்கம் சென்று தேடுகின்றனர். அப்போதும் சில நடிகைகள் ஜகா வாங்குகிறார்கள். டோலிவுட் சீனியர் நடிகர் என்.டி.பாலகிருஷ்ணா விஷயத்தில் இதுபோன்ற சம்பவம் அவ்வப்போது நடக்கிறது. பயோபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகையைத் தேர்வு செய்ய ஹீரோயின்களுக்கு வலை வீசினார் இயக்குனர். கேத்ரின் தெரசாவை நடிக்கக் கேட்ட போது அவர் அதிக சம்பளம் கேட்டு நழுவினார்.

இதையடுத்து பிசாசு படத்தில் நடித்த பிரயகா மார்ட்டின் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் பாலகிருஷ்ணாவுடன் அவருக்கு டெஸ்ட் ஷூட் நடத்தியதில் ஜோடி பொருத்தம் சரியில்லை, அண்ணன் தங்கைப் போல் இருப்பதாகக் கூறி வேண்டாம் என்று ஒதுக்கினார்கள். இதையடுத்து சாயிஷாவை தேர்வு செய்து அறிவித்தனர். சாயிஷாவும் தனது இணைய தள பக்கத்தில் இதனை அறிவித்தார். ஆனால் ஒருவார காலத்துக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை சாயிஷா அப்படத்திலிருந்து விலகினார்.

லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹாவை என். டி. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கக் கேட்டபோது அவர் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டார். பிறகு ஸ்ரேயா, பூர்ணா பெயர்கள் அடிபட்டன.ஏற்கனவே பாலகிருஷ்ணாவுடன் லெஜெண்ட் மற்றும் டிக்டேட்டர், ரூலர் படங்களில் ஜோடியாக நடித்த சோனால் சவுஹானை மீண்டும் ஜோடியாக முடிவு செய்து அவரை அணுகினார்கள். அவர் ஒரே வார்த்தையில் நோ சொல்லிவிட்டார். சீனியர் நடிகருடன் ஜோடி சேர்ந்ததால் இளம் ஹீரோக்கள் படத்தில் அழைப்பு வருவதில்லை என்று கூறும் அவர் என்.டி,பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்ததில் தனக்குத் திரையுலகில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சோனால் சவுஹான் கூறிவிட்டாராம் தற்போது பிரக்யா ஜெய்ஸ் வால் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை