சினிமா திரையிட வி பி எப் கட்டணத்தை எதிர்த்து போராட்டம்.. டி.ராஜேந்தர் அறிவிப்பு..

Advertisement

டைரக்டர் டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
விபிஎப் கட்டணத்தை 40 சதவீதம் கட்ட வேண்டும் என்று கியூப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதைத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்காது. அதற்காக நாங்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம். நாங்கள் இது குறித்து கியூப் நிறுவனத்திடம் பேச அங்குச் சென்றபோது சந்திக்க மறுத்துவிட்டார்கள். வட இந்திய கம்பெனி ஹாலிவுட் நிறுவனங்களுக்கு விபி எப் கட்டணம் வசூலிக்காதபோது தமிழ்ப் படங்களுக்கு வசூலிப்பது ஏன்?இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

பேட்டியின்போது செயலாளர் ஜேஎஸ்கே. சதிஷ்குமார், பொருளாளர் கே.ராஜன், துணைத் தலைவர் பி.டி. செல்வ குமார், துணைத் தலைவர் ஆர். சிங்கார வடிவேலன், இணை செயலாளர் கே.ஜி பாண்டியன், இணை செயலாளர் எம். அசோக் சாம்ராஜ், இணை செயலாளர் - சிகரம். ஆர்.சந்திர சேகர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனர் உஷா ராஜேந்தர், இசக்கி ராஜா, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் இன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
1.தமிழ் நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் விபிஎஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மற்றும் க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை அந்த நிறுவனங்கள் உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி எங்களுடைய தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் க்யூப் மற்றும் சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல விதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் செவி சாய்க்காத காரணத்தாலும், வேறு சில காரணங்களைச் சொல்லி காலம் தாழ்த்திக் கொண்டே இருந்ததாலும், கியூப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்த காரணத்தாலும், இன்று கூட்டப்பட்ட எங்களது தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்தில் எங்களால் (தயாரிப்பாளர்களால்) இனிமேல் விபிஎஃப் கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2.படத்தைத் திரையிடுவதற்கான சர்வீஸ் கட்டணம் ஒரு திரையரங்கிற்கு ரூ.1,500 தவிர எங்களால் எந்த விதத்திலும் விபிஎஃப் மற்றும் எந்த கட்டணமும் செலுத்த இயலாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

3. வட இந்திய கம்பெனிகளுக்கு விபிஎஃப் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலே படத்தைத் திரையிட வழி செய்யும் போது எங்களுடைய தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் பாகுபடுத்தி எங்களைப் பழிவாங்குவது எந்த அடிப்படையில் எங்களிடம் மட்டும் விபிஎஃப் வசூலிப்பது நியாயம் என்றும் மற்றும் எங்களிடம் மட்டும் விபிஎஃப் வசூலிப்பது நியாயமான காரியமாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஒரு வாரக் காலத்திற்குள் எங்களுக்குரிய பதிலைத் தராவிட்டால் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் என்பதை இந்த செயற்குழு கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>