சீதையாக நடிக்க உள்ள பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று..

by Chandru, Dec 8, 2020, 10:00 AM IST

கொரோனா ஊரடங்கு கால கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை தொடங்கினாலும் கொரோனா பரவல் ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது. தற்போது பிரபல நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் ஆகி உள்ளது.இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் கிரித்தி சனோன். தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த 1: நேனொக டய்னே படத்தில் நடித்ததுடன் தோசாய், மற்றும் இந்தியில் ஹீரோபன்ந்தி, திவாலே. ராபட்ட போன்ற படங்களில் நடித்திருக்கிறார் கீரித்தி சனோனன்.

சமீபத்தில் தான் இந்தி பட ஷூட்டிங் ஒன்றில் ராஜ்குமார் ராவுடன் கலந்துகொண்டு நடித்தார் கிரித்தி. சண்டிகரில் இதன் ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் முடித்துவிட்டு விமானத்தில் மும்பை புறப்பட்டபோது விமானத்திலிருந்து, படப்பிடிப்பு முடிந்தது பை பை சண்டிகர் என்று மெசேஜ் வெளியிட்டார். மும்பை வந்த பிறகு எந்த பதிவும் இடவில்லை. இந்நிலையில் கிரித்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அதில் பாசிடிவ் என தெரியவந்தது. கிரித்தி சனோன் அடுத்து பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படத்தில் சீதா வேடத்தில் நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

சமீபத்தில் இந்தி நட்சத்திரங்கள் வருண் தவான், நீட்டு கபூர், மனிஷ் பால் மற்றும் இயக்குனர் ராஜ்மெஹ்த்ரா ஆகியோர் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜக் ஜக் ஜியோ என்ற படப்பிடிப்பில் சண்டிகரில் இருந்தனர். அனில் கபூர். கைரா அத்வானி ஆகியோரும் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டனர் ஆனால் அவர்கள் இருவருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரிந்தது. அனில் கபூருக்கு கொரோனா தொற்று என்று வதந்திகள் பரவியது. இதுகுறித்து அவர் கூறும்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். எனக்கு கொரோனா தொற்று இல்லை. உங்கள் அக்கறை மற்றும் வாழ்த்துக்கு நன்றி எனத் தெரிவித்தார்.கொரோனா பாதித்த வருண் தவான் கூறும்போது.எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் படப்பிடிப்பில் முன்னெச்சரிக் கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். நானும் கூடுதல் அக்கறை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனாலும் இதிலிருந்து விரைவில் விடுபடுவேன். அதற்கான தைரியம் என்னிடம் உள்ளது என்றார்.ஏற்கனவே கொரோனா தொற்றால் திரைப்பட நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன் தொடங்கி தமன்னா, நிக்கி கல்ராணி வரை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். இதில் அமிதாப்பச்சன், தமன்னா போன்றவர்கள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை