பிரம்மாண்ட படத்தில் இணையும் ரஜினி நடிகை..

by Chandru, Dec 8, 2020, 10:10 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தவர் ஸ்ரேயா. நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். தெலுங்கு. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாகத் தமிழில் சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்தார்.ஸ்ரேயா கடந்த 2018ம் ஆண்டு ஆண்ட்ரி கொஸ்சேவ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொள்கிறார். தற்போதும் தமிழில் சண்டக்காரி, கம்னம் போன்ற படங்களில் நடிப்பதுடன் அவர் நடித்து முடித்துள்ள நரகாசுரன் படம் திரைக்கு வராமல் பைனாஸ் பிரச்சனை காரணமாக முடங்கி உள்ளது. இதற்கிடையில் ராஜமவுலி இயக்கும் பிரமாண்ட படமான ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட் போன்றவர்கள் நடிக்கின்றனர். ஸ்ரேயா முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார். அஜய் தேவ் கன் ஜோடியா படத்தில் வருகிறார். அவர் இன்னும் படப் பிடிப்பில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இந்தி நடிகை அலியாபட் ஆர் ஆர் ஆர் படப் பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். அவரை இயக்குனர் ராஜ மவுலி வரவேற்றார். அவரது ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கியது. இதில் ராம் சரண் ஜோடியாக அலியாபட் நடிக்கிறார். அலியா பட்டின் ஷுட்டிங்கை எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் முடிக்க ராஜமவுலி திட்டமிட்டிருக்கிறார்.ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் முதன்முறையாக இணைந்து நடிப்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தில் அல்லூரி சிதாராம ராஜுவாக நடிக்கும் ராம் சரண் ஜோடியாக அலியா பட் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜூனியர் என் டி ஆர் கோமரம் பீம் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்.

மேலும் இப்படத்தின் ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவரும் பயிற்சியின் போது காயம் அடைந்தனர். இதனாலும் படப்பிடிப்பு தள்ளிப்போனது. எல்லாம் முடிந்து கடந்த மாதம் படப் பிடிப்பு தொடங்கி 50 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடந்தது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சென்ற படக் குழு அங்குள்ள மஹாபலேஸ்வர் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியது. ஆர் ஆர் ஆர் படத்தில் அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாரிசு நடிகை அலியாபட் நடிகர் சுஷாந்தை அவமானப்படுத்தியாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதை ராஜமவுலி ஏற்கவில்லை.

கடந்த மாதம் அலியாபட் ஷூட்டிங்கில் பங்கேற்பதாக இருந்தது. அப்போது இப்படத் தின் டீஸரில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி வைத்து நடித்ததற்கு ஆதிவாசிகளும். பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் ராஜமவுலியை தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதுபோன்ற பிரச்சனையால் அலியாபட் படப்பிடிப்பு தள்ளிப்போனது. பிரச்சனைகளின் சூடு குறைந்த நிலையில் அலியாபட் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்