கோடிகள் சம்பள பட வாய்ப்பை உதறிய இயக்குனர்.. சூர்யா படம் இந்தியில் ரீமேக்..

by Chandru, Dec 9, 2020, 10:23 AM IST

திரையுலகில் வாய்ப்புக்காகப் பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காத பல திறமையாளர்கள் திரையுலகில் இருக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தவுடன் தான் யார் என்பதையும் தனது திறமை என்ன என்பதையும் நிரூபிக்கும் இயக்குனர்களுக்கு இடைவிடாத வாய்ப்பு மழை பொழிவது நிச்சயம். மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச் சுற்றுப் படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அடையாளம் காணப்பட்ட இயக்குனர் சுதா கொங்கரா.

அப்படத்துக்குப் பிறகு சூர்யா நடித்த சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கினார். இப்படம் வெளியிடுவதில் தியேட்டர் அதிபர்களுக்கும் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் படத்தை ஒடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தியேட்டரில் வெளியிடாமல் ஒடிடி தளத்தில் படத்தை வெளியிடக்கூடாது அப்படி வெளியிட்டால் அந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஒடிடி யில் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். விமான அதிபரின் உண்மை கதையாக இது அமைக்கப்பட்டிருந்தது.சூரரைப்போற்று படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு வெவ்வேறு மொழிகளிலிருந்து படம் இயக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. தெலுங்கில் பிரபல படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் கோடி கள் சம்பளம் தருகிறோம் எங்கள் நிறுவனத்துக்குப் படம் இயக்கி தாருங்கள் என்று சுதா கொங்கராவிடம் கேட்டது. ஆனால் அதைச் சுதா ஏற்க மறுத்துவிட்டார்.

சுதா கொங்கரா அடுத்து இந்தியில் பிரபல ஹீரோ நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான ஸ்கிரிப்ட் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும் சூரரைப்போற்று படத்தையும் இந்தியில் ரீ மேக் செய்ய உள்ளார். இதனை சூர்யாவே இந்தியிலும் தயாரிக்க உள்ளார்.சுதா கொங்கரா தேடி வந்த பட வாய்ப்பை ஏற்க மறுத்தது இண்டஸ்ட்ரியில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

You'r reading கோடிகள் சம்பள பட வாய்ப்பை உதறிய இயக்குனர்.. சூர்யா படம் இந்தியில் ரீமேக்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை