விஜய்சேதுபதி பட இயக்குனர் பற்றி வேகமாக பரவும் தகவல்..

by Chandru, Dec 9, 2020, 15:28 PM IST

கோலிவுட் இயக்குனர் ரத்ன சிவா. விஜய் சேதுபதி நடித்த றெக்க. அருண் விஜய் நடித்த வா டீல், ஜீவா நடித்த சீறு ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரைப்பற்றி தற்போது நெட்டில் வேகமாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நல்ல கதை அம்சமுள்ள கமர்சியல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரத்தின சிவா. சமீபத்தில் இவர் இயக்கிய சீறு படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது அடுத்த படத்திற்கான வேலையில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் சமயத்தில் அவரை பற்றி யாரோ முகம் தெரியாத நபர் தவறான ஆடியோ பதிவு ஒன்றை வாட்ஸ் அப்பில் பரவ விட்டிருக்கிறார். அந்த ஆடியோவில்.. இயக்குநர் ரத்தின சிவாவிடம் நடிகர் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இருப்பதாகவும். அதனால் இன்வெஸ்ட் பண்ண ஒரு தயாரிப்பாளர் தேவை என்றும் பேசியிருக்கிறது ஒரு குரல் சொல்கிறது.

இந்தச் செய்தி குறித்து இயக்குநர் ரத்தினசிவா கூறியதாவது, "இது முழுக்க முழுக்க தவறான செய்தி. நாங்கள் படம் செய்வதாக இருந்தால் அந்தச் செய்தி எங்கள் மூலமாகத் தானே வரும்? எங்களுக்கு சம்பந்தமில்லாதவர்கள் இப்படியொரு தவறான செய்தியை வெளியிடுகிறார்கள் அவர்களின் நோக்கம் என்னவென்றே தெரியவில்லை" என்றார்.சமீபகாலமாக நடிகைகளின் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து தவறான தகவல்கள் வெளியிடும் சம்பவம் நடக்கிறது. நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டர், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பவர். அவரது சமூக வலை தள பக்கங்களை யாரோ ஹேக் செய்து முடக்கினர்.

இதையறிந்து ஷாக் ஆன வரலட்சுமி தனது சமூக வலைதளத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு ஒருநாளில் அதனை மீட்டார். அதேபோல் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராமை ஹேக் செய்தவர்கள் சமந்தா பற்றி விமர்சித்து மெஜேஜ் வெளியிட்டனர். இதனால் இருவரின் ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பூஜா தனது இன்ஸ்டாவை யாரோ ஹேக் செய்து இதுபோல் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்கள் என விளக்கம் அளித்தபிறகே பிரச்சனை தீர்ந்தது. அதுபோல் தற்போது இயக்குனர் ரத்ன சிவா பெயரைப் பயன்படுத்தி அவரை வம்பில் இழுத்து விட்டிருக்கின்றனர்.

You'r reading விஜய்சேதுபதி பட இயக்குனர் பற்றி வேகமாக பரவும் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை