தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி அறிவிப்பு.. விரைவில் சென்னையில் சர்வதேச பட விழா..

by Chandru, Dec 9, 2020, 15:55 PM IST

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் விரைவில் நடக்க உள்ளது. இதில் நடக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதுபற்றிய விவரம் வருமாறு: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். 2019 அக்டோபர் 16 முதல் 2020 அக்டோபர் 15 வரையிலான காலகட்டத்தில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களே போட்டியில் பங்கேற்க தகுதியானவை.

1. போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் எங்களது இணையதளத்தில் (website icaf.in ) உள்ளன. அல்லது, நம்பர் 4, இரண்டாவது தளம், இ-பிளாக், ஜெமினி பார்ஸன் அப்பார்ட்மன்ட்ஸ், கதீட்ரல் கார்டன் ரோடு, சென்னை- 600006-ல் அமைந்துள்ள இந்தோ சினி அப்ரிஷி யேஷன் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் விண்ணப்பத் தைப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு எண்: +91 44 2821 2652 . இமெயில் முகவரி: thangaraj_icaf@hotmail.com / iindocine.ciff@gm

2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் ஜனவரி 9, 2021. விண்ணப்பங்களுடன் ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய திரைப்படத்தின் 2 டிவிடிக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி விண்ணப்பப் படிவத்தின் நெறிமுறைகள்:

1) விருதுகள்:
1) சிறந்த தமிழ்த் திரைப்படம் 2) 2-வது சிறந்த தமிழ்த் திரைப்படம்,
3) ஸ்பெஷல் ஜூரி விருது

தகுதி:

1. இந்தப் போட்டி தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே. படத்தின் தயாரிப்பாளர்கள் / அல்லது இயக்குநர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். படத்தைப் போட்டிக்கு அனுப்ப விண்ணப்பதாரருக்கு உரிமை இருத்தல் அவசியம்.

2. திரைப்படமானது 2019 அக்டோபர் 16 முதல் 2020 அக்டோபர் 15 வரையிலான இடைப்பட்ட காலக்கட்டத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றதாக இருக்க வேண்டும்.

3. டப்பிங் திரைப்படங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கத் தகுதியற்றவை.

4. போட்டியில் பங்கேற்கும் படங்களுக்கு ஆங்கில சப்டைட்டில் அவசியம்.

5. தேர்வு செய்யப்பட்ட படத்தின் தயாரிப்பாளர், படத்தை டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் (DCP) முறையில் ஆங்கில சப்டைட்டிலுடன் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்.

3) விண்ணப்பங்களைப் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: விருதுக்கான விண்ணப்பத்தை, திரைப்பட டிவிடிக்களுடன் 2021 ஜனவரி 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

4) திரைப்பட நுழைவுக்கான வழிமுறைகள்

(a) படத்தின் தயாரிப்பாளர் அல்லது உரிமையாளர் அல்லது அவர்கள் நியமித்த பிரதிநிதி மூலமாக மட்டுமே படத்தை நுழைவுக்குப் பதிவு செய்ய முடியும். தயாரிப்பாளர், விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் சென்சார் சான்றிதழ் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

(b) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் தேவை. இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.

5) தெரிவுக்கான நெறிமுறை:எந்தத் திரைப்படத்தை விருதுக்குத் தேர்வு செய்வதென்பது, 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு நடுவர் மற்றும் 2 உறுப்பினர்கள் கொண்ட குழுவால் முடிவு செய்யப்படும்.

6) பொதுவானவை:
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாக் குழுவின் முடிவுகள் இறுதியானவை. திரைப்படக் குழுவின் சட்டத் திட்டங்கள், வழிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து முடிவுகளும் எட்டப்படும். ஆகையால், இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கும் அனைவரும், வழிமுறைகளை ஏற்றுக் கொண்டதாகவே கருதப்படுவர்.
விண்ணப்பங்கள், டிவிடிக்கள், மற்ற உபகரணங்கள் என அனைத்தும், விழா இயக்குநர்,
நம்பர் 4, இரண்டாவது தளம்,
இ-பிளாக், ஜெமினி பார்ஸன் அப்பார்ட்மன்ட்ஸ்,
கதீட்ரல் கார்டன் ரோடு,
சென்னை- 600006-ல் அமைந்துள்ள இந்தோ சினி அப்ரிஷி யேஷன் ஃபவுண்டேஷன் அலுவலகத்திற்கே அனுப்பப் பட வேண்டும். தொலைபேசி / ஃபேக்ஸ்: 91 44 2821 2652.
இவ்வாறு கண்டிஷன்கள் விதிக்கப்பட்டுள்ளன.

You'r reading தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி அறிவிப்பு.. விரைவில் சென்னையில் சர்வதேச பட விழா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை