இந்தியாவிலும் உலகெங்கிலும் அதிகம் தேடப்பட்டவர்கள் மற்றும் பிரபலங்களின் விவரங்களை கூகிள் இணையதளம் வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டில், ஐபிஎல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தையாக இருந்தது. கொரோனா வைரஸ் அமெரிக்க தேர்தல் முடிவுகள் மற்ற தேடல்கள் ஆகும். பிரபலங்களில் அமிதாப்பச்சன், கங்கனா ரனாவத், மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பிடித்தனர். பட்டியலில் இடம் பிடித்தவர்கள் விவரம் வருமாறு: 1. ஜோ பிடன் (அமெர்க்க புதி அதிபர்)
2. அர்னாப் கோஸ்வாமி (மீடியா ஆசிரியர்)
3. கனிகா கபூர்
4. கிம் ஜாங்-உன்
5. அமிதாப்பச்சன்
6. ரஷீத்கான்
7. ரியா சக்ரவர்த்தி
8. கமலா ஹாரிஸ்
9. அங்கிதா லோகண்டே
10. கங்கனா ரனாவத்
படங்களின் பட்டியலில், சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் கடைசி படம் தில் பெச்சாரா முதலிடத்திலும், சூரியாவின் சூரரைப்போற்று இரண்டாவது இடத்திலும் உள்ளன. மகேஷ் பாபுவின் சரிலேரு நீகேவரு சமூக ஊடகத் தேடல்களில் பிரபலமான தலைப்புகளில் இடம்பெற்றிருக்கிறது.
திரைப்படங்கள்:
1. தில் பெச்சாரா
2. சூரரைப்போற்று
3. தன்ஹாஜி
4. சகுந்தலா தேவி
5. குஞ்சன் சக்சேனா
6. லக்ஷ்மி
7. சதக் 2
8. பாகி 3
9. எக்ஸ்ட்ராக்ஷன்
10. குலாபோ சீதாபோ
மறைந்த சுஷாந்த் சிங், யாஹூ இணையதள தேடுதலில் முதலிடம் பிடித்திருந்தார். ஆனால் கூகிளில் அவர் நடித்த கடைசி படமானதில் பேச்சாரா படம் மட்டுமே முதலிடம் பிடித்திருக்கிறது. அமிதாப்பச்சன் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதித்து அவரது உடல்நிலை மோசமானது அவர் உடல்நலம் பெற வேண்டும் என இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார். நடிகை ரியா சக்ரபோர்த்தி மறைந்த சுஷாந்த்சிங்கின் காதலி. சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ள இவர்தான் போதை மருந்துகள் கொடுத்து அவரை தூண்டினார் என சுஷாந்த்தின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி ரியாவை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் கைது சிறையில் அடைத்தனர்.
ஒரு மாதம் சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். நடிகை கங்கனாவை பொருத்தவரை பாலிவுட் திரையுலகினர் மீது போதை மருந்து புகார் கூறியதுடன் மகாராஷ்டிரா மாநில ஆளும் கட்சி சிவசேனாவுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். அவருக்கு எதிராக போராட் டம் நடந்தது, மத்திய அரசு கங்கனாவுக்கு கமாண்டோ பாதுகாப்பு அளித்தது. மேலும் மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்க முயற்சிக்கிறார் என்று போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்த 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராக வில்லை. இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து தன்னை கைது செய்யக்கூடாது என்று ஸ்பெஷல் உத்தரவு ஒன்றை பெற்றிருக்கிறார் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.