கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு லாக்டவுனில் பல நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்தன. நடிகைகள் காஜல் அகர்வால், பிராச்சி தெஹலான், மியா ஜார்ஜ், நடிகர்கள் நிதின், ராணா ஆகியோர் திருமணங்கள் கொரோனா விதிமுறைகளால் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்க நடந்து முடிந்தது. விஐபிக்கள், உடன் நடித்த சினிமா நடசத்திரகள் என யாரும் யாரையும் அழைக்கவில்லை. இவர்களிலிருந்து நடிகை நிஹாரிகா திருமணம் தாம்தூம் என நடந்து முடிந்திருக்கிறது.தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவரது திருமணம்தான் ஆர்ப்பாடமாக நடந்துள்ளது. அவரது குடும்ப பின்னணி எல்லாமே சினிமா வட்டாரத்தில் பெரும்புள்ளிகள்.
நடிகர் சிரஞ்சீவின் அண்ணன் நாகபாபுவின் மகள் நிஹாரிகா. நாகபாபு தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சிரஞ்சிவி டோலிவுட் மெகா ஸ்டாராக இன்னனும் நடித்து வருகிறார். மற்றொரு சகோதரர் பவன் கல்யாண். டோலிவுட் முன்னணி நடிகர். சிரஞ்சீவி மகன் ராம் சரண், நாகபாவின் மூத்த மகன் வருண் தேஜ் இருவருமே டோலிவுட்டில் இளம் நடிகர்கள் என நிஹாரிகா குடும்பம் சினிமா நட்சத்திர குடும்பமாக திகழ்கிறது. திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஓபாராய் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று ( 9ம் தேதி) இரவு 7.15 மணிக்கு நிஹாரிகா கழுத்தில் விஜே சைதன்யா தாலி கட்டினார். நிஹாரிகா தங்க நிற பட்டு சேலையில் ஜரிகை வேய்ந்த உடையும் சைதன்யா ஊதா நிற குர்தா, பைஜாமா அணிந்திருந்தார்.
தெலுங்கு முறைப்படி சடங்குகள் நடைபெற்றன. அந்த படங்கள் நெட்டில் வெளியாகி வைரலாகி உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களாக மெஹந்தி விழா, சங்கீத் விழா, மணப்பெண் அழைப்பு விழா. உறவு முறையினர் தண்ணீர் ஊர்று விழா என பல விழாக்கள் களைகட்டியது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க 10 நாட்களுக்கு முன்பே நிஹாரிகா உதய்பூர் சென்றார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் கடந்த 5 நாட்களாக நடந்தது. திருமண விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், வருன் தேஜ் என குடும்பத்தினர் அனைவரும் கலந்துக்கொண்டனர். முன்னதாக அனைவரும் நடன அரங்கில் கூடி நடனம் ஆடினார்கள். சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட அனைவரு மே நடனம் ஆடினார்கள்.
நிஹாரிகாவை தனது தோள் மீது உட்கார வைத்து அவரது அண்ணன் வருண் தேஜ் நடன அரங்கு வரை நிஹாரிஹாவை சுமந்து வந்தார். வருண் தேஜ் தோள் மீது இரண்டு கால்களையும் தூக்கிப்போட்டு ஏறி நிஹாரிகா அமர்ந்ததும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் சத்தம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த 2 வாரமாக நிஹாரிகா திருமண விழா இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது அது நிறைவுக்கு வந்திருக்கிறது. திருமணம் முடிந்து அனைவரும் ஐதாராபாத் திரும்புகின்றனர். நடிகர் சிரஞ்சீவி, ராம் சரண் ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளனர். நடிகர் பவன் கல்யாண் வக்கில் சாப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.