தமிழ் திரையுலகில் இரண்டாக உடையும் சங்கங்கள்.. டி.ராஜேந்தர் சங்கத்துக்கு எதிராக மற்றொரு அமைப்பு..

Advertisement

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் திரைப்பட சங்க அமைப்புகள் வலுப்பெற்றவையாக உள்ளன. திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு, தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றவர்கள் உறுப்பினர்கள் கொண்ட என பல அமைப்புகள் கோலிவுட்டில் செயல்பட்டு வருகிறது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி ஆர்.கே.செல்வமணி தலைமையில் செயல்படுகிறது. இதில் 23 யூனியன்கள் இணைந்துள்ளன. 23 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை ஃபிலிம்சேமபர் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பிரிந்து சென்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கினார்கள். இதன் தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்வானார்.

கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் என். முரளி ராமநாராயணன், டைரக்டர் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. என். முரளி தலைவராக தேர்வு செய்யப்பட்டதுடன் அவரது அணியை சேர்ந்த பலர் நிர்வாக மற்றும் செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் டி.ராஜேந்தர் தலைமையில் சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய அமைப்பு உருவானது. அதில் மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட் டனர். அதாவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனவும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எனவும் 3 சங்கமாக உடைந்தது. இந்நிலையில் மற்றொரு சங்கம் உடைந்திருக்கிறது. சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறார் டி.ராஜேந்தர்.

தற்போது தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என்ற புதிய அமைப்பு உருவானது. இதன் தலைவராக அருள்பதி உள்ளார். இவர் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆவார். தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க துணைத்தலைவர்களாக அழகர்சாமி, செண்பகமூர்த்தி, பொதுச் செயலாளராக ராஜ மன்னார், இணைச் செயலாளர்களாக மணிகண்டன், துரைராஜ், பொருளாளராக ரவிசங்கர் பொறுப்பு ஏற்றிருக்கின்றனர். சங்கங்களுக்குள் பிரச்சனை என்பது அவ்வப்போது நடக்கும் ஆனால் சங்கமே உடையும் அளவுக்கு பிரச்சனைகள் சமீபகாலமாக கோலிவுட்டில் நடந்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் மோதல்கள் இருக்கின்றன. இச்சங்கத்தின் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது ஆனால் வாக்குகள் எண்ணப்படாமல் கோர்ட் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>