விஜய் தேவரகொண்டாவை முத்தமிட துடிக்கும் ஹீரோயின்..

Advertisement

கோலிவுட் படங்களில் கன்னத்தில் முத்தமிடும் காலம் மாறி உதட்டு முத்தமிடும் ஹாலிவுட் பாணி அறிமுகமாகிப் பல காலம் ஆகிவிட்டது. பிரபல நடிகர், நடிகைகள் லிப் டு லிப் கிஸ் காட்சிகளில் நடிக்கின்றனர். ஆனால் சில நடிகைகள் முத்தமிடும் காட்சியில் குறிப்பாக உதட்டு முத்தம் எனப்படும் லிப் டு பிப் காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. நஸ்ரியா, சாய் பல்லவி, பூ பார்வதி போன்றவர்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. அந்த பட்டியலில் தமன்னாவும் இருக்கிறார். இவர் கன்னத்தில் முத்தம் தரும் காட்சியில் நடித்தாலும் உதட்டு முத்தம் தர ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அந்த விதியை அவர் உடைத்தால் யாருக்கு முத்தம் தருவார் என்று கூறி இருக்கிறார்.

இதற்கிடையில் நடிகை தமன்னா கடந்த மாதம் படப் பிடிப்புக்காக ஐதராபாத் வந்த போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றார். சுமார் 3 வாரச் சிகிச்சை மற்றும் தனிமைக்குப் பிறகு அவர் வீட்டிற்குச் சென்றார். அதன் பிறகுத் தனது உடற் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை தொடர்ந்தார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார்.

தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். அவரை நடிகை சமந்தா நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தான் ஒடிடி தளத்தில் நடத்தும் சாம் ஜாம் டாக் ஷோவிற்கு வரவேண்டும், அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கக் கேட்டார். அதற்கு தமன்னா ஒப்புக்கொண்டார். சொன்னபடி சமந்தா ஷோவில் தமன்னா பங்கேற்றார். அப்போது இளம் நடிகர் அகில் காதலிப்பது குறித்துக் கேட்டதற்கு காதலுக்கு வயது கணக்கு கிடையாது என்றார். பிறகு நீங்கள் முத்தம் தருவதில்லை என்ற விதியை விலக்கிக் கொண்டால் எந்த நடிகருக்கு முத்தம் தருவீர்கள் என்று கேட்டார். அதற்குச் சட்டென விஜய் தேவரகொண்டாவுக்கு தருவேன் என்று பதில் அளித்தார் தமன்னா. அதைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதுபோன்ற பலவெறு விஷயங்களை தமன்னா வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே சமந்தா நடத்திய இந்த ஷோவில் நடிகர் ரானா கலந்துகொண்டார். அப்போது ரானா, தான் சிறுநீராக நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்றது பற்றியும் தனது உயிருக்கு டாக்டர்கள் நாள் கணக்கில் கெடு வைத்தது பற்றியும் கூறினார். பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தது பற்றி கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது நிலையைக் கேட்டு சமந்தாவும் கண்ணீர் சிந்தினார். மேலும் சிரஞ்சீவி, நாக் அஸ்வின், சைன நேவால், விஜய் தேவரகொண்டா போன்றவர்களை சமந்தா நேர்காணல் செய்திருக்கிறார்.

சமந்தா சமீபத்தில்தான் விடுமுறை பயணமாகக் கணவர் சைதன்யாவுடன் மாலத்தீவு சென்றார். அங்கு ஸ்கூபா டைவிங் மற்றும் கடல் நடுவில் உள்ள ரெண்டாரண்ட் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களில் உற்சாகமாக ஈடுபட்டு அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். பின்னர் இந்தியா திரும்பினார். ஜனவரி மாதத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கின்றனர்.
தமன்னா தற்போது தெலுங்கில் சீட்டிமார், குருதுண்டா சீதகாலம் மற்றும் அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். தமிழில் தமன்னாவுக்குக் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>