பணக்காரரை கட்டிய கவர்ச்சி நடிகை பாடு திண்டாட்டம்.. கடன் சுமையில் தவிக்கிறார்

by Chandru, Dec 11, 2020, 13:54 PM IST

நடிகைகள் பெரும்பாலும் தொழி அதிபர்களை திருமணம் செய்கின்றனர். எதிர்காலத்தில் சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணமும் அதற்கு ஒரு காரணம். சிலரது வாழ்க்கை நன்றாக அமைகிறது. சில நடிகைகளின் வாழ்க்கை தண்ணீரில் அழும் மீன் கதையாக உள்ளது. போக்கிரி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கஜினி போன்ற படங்களில் நடித்த அசின் இந்தியில் நடிக்கச் சென்றார். அத்துடன் கஜினி படத்தில் செல்போன் அதிபரை மணப்பதுபோல் நிஜத்திலும் செல்போன் அதிபர் ராகுல் சர்மாவை காதலித்து மணந்தார். கடந்த 4 வருடம் ஆகும் நிலையில் அவர் தரப்பிலிருந்து திருமண வாழ்க்கை பற்றி எந்த வருத்தமான விஷயமும் பகிரப்படவில்லை. இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அரியன் என்ற பெண் குழந்தை பிறந்தது. சினிமா நடிப்புக்கு முழுக்கு போட்டு முழுக்க குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

சில நடிகைகள் வாழ்கையை சோகமயமாகிக்கொள்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் ராக்கி சாவந்த். இந்தி நடிகையான இவர் தமிழில் முத்திரை என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் சுரேஷ் இயக்கிய கம்பீரம், ரவி ராஜா இயக்கிய என் சகியே என்ற படத்திலும் நடித்தார். போஜ்புரி, மராத்தி படங்களிலும் நடித்திருக்கிறார். கவர்ச்சி நடிகையான தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட ராக்கி சாவந்த் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றிருக்கிறார். மணமகன் தேர்வு செய்து திருமண செய்துகொள்ளும் ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் ராக்கி கலந்துகொண்டார். அதில் பங்கேற்றவர்களில் யூ டியூப் பிரபலம் தீபக்கலால் என்பவரை திருமணம் செய்ய தேர்வு செய்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. அதைக்கண்டு தீபக் உற்சாகமாக இருந்தார். ஆனால் திடீரென்று திருமணத்தை ராக்கி சாவந்த் ரத்து செய்துவிட்டு ஜூட் விட்டார். ராக்கியை மணக்க முடியாமல் போன தீபக் யூடியூபில் கதறி அழுது வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் ராக்கி இங்கிலாந்து தொழில் அதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணம் பற்றி அறிவித்தவர் கணவரின் புகைப்படத்தை வெளியிடவில்லை. சில நாட்கள் அவருடன் வாழ்ந்த நிலையில் என்ன நடந்ததோ அழுதபடி வீடியோ வெளியிட்டார் ராக்கி சாவந்த். கணவருக்கு அவர் விடுத்த வேண்டுகோளில் நீங்கள் சொல்வதை கேட்கிறேன். என்னை ஒதுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். அதன்பிறகு அந்த பிரச்னையும் அமுங்கிக்கிடக்கிறது. ராக்கி ஷாவந்த் இந்தி பிக்பாஸ் 14 ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் முன்னதாக பிக்பாஸ் முதல் சீசனில் 2006ம் ஆண்டு கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து 4 வாரத்தில் வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் வீட்டுக்குள் வந்து முதல் 4 போட்டியாளர்களில் ஒருவராக இடம் பிடித்தார். தற்போது பிக்பாஸ் இந்தி ஷோவில் கலந்து கொண்டிருக்கும் ராக்கியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. எனது திருமணம் குடும்பத்தினர் பார்த்து செய்து வைத்ததுதான்.

இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபரை மணந்தேன். அப்போது சூழ்நிலை சரியில்லாமல் இருந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை. அவரை எனது ரசிகர்களிடம் அறிமுகம் செய்துகொள்ளுங்கள். இந்தியாவுக்கு வாருங்கள் என்று சொன்னேன். ஆனால் அவர் வரவில்லை. என்னைப் பொறுத்தவரை திருமண செய்து கொண்டதை தவறாக எண்ணுகிறேன். என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. எனக்கு கடன் சுமையும் அதிகம் இருக்கிறது. அதை கட்ட முடியாமல் தவிக்கிறேன். பணக்காரரை திருமணம் செய்துகொண்டால் சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணம் தவறாகி விட்டது. எனக்கு மனதில் உறுதி இருக்கிறது, இதுபோன்ற விஷயங்களால் நான் துவண்டுவிடவில்லை. சிலர் எடுக்கும் தவறான முடிவையும் நான் எடுக்க மாட்டேன் என்றார். ராக்கி ஷாவந்துக்கு பட வாய்ப்புகள் குறைவாக வருகின்றன. தற்போது ஆர்டிகல் 370 என்ற இந்தி படத்தில் நடிக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்