பெங்களூரூவில் கடந்த சில மாதங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மருதுகளை கைப்பற்றினார்கள். இந்த வழக்கில் விசாரணை தொடங்கியதும் கன்னட நடிகைகள் சிலரைப் பற்றியும் போலீஸார் அழைத்து விசாரித்தார்கள். நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை மருத்து வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
கடந்த 2 மாதமாக இருவரும் சிறையில் அடைப்பட்டுள்ளனர். சிறைக்குள் இருந்த போது ஒரே அறையில் வைக்கப்பட்டிருந்த சஞ்சனாவுக்கும் ராகினி திவேதிக்கும் மோதல் ஏற்பட்டது. ராகினி இரவில் நீண்ட நேரம் விளக்கு போட்டுக்கொண்டு படிப்பதால் தனது தூக்கம் கெட்டுவிடுவதாக புகார் அளித்தார். இதையடுத்து இருவரும் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.
சிறையில் இருக்கும் ராகினி சஞ்சனா இருவரும் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்னர். முதலில் இவர்கள் ஜாமீன் கேட்டு செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன இந்நிலையில் ராகினி திவேதி சமீபத்தில் ஜாமீன் வழங்கக் கோரி ஐகோட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த ,மனுவை விசாரித்த நீதிபதி ராகினிக்கு ஜாமீன் தராதது ஏன் என்று விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையில் நடிகை சஞ்சனா கல்ராணி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார், அதனை விசாரித்த நீதிபதி சஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 3 லட்சம் மதிப்பிலான பத்திரம் மற்றும் மாதம் ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்திருக்கிறது.