சிறப்பு படத்துடன் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன ராஷ்மிகா..

by Chandru, Dec 12, 2020, 14:38 PM IST

நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில், “சண்டிகரில் எனது முதல் முறை” என்று குறிப்பிட்டார். ஐதராபாத்தில் இருந்து புறப்படும்போது, ​​ஸ்டைலான உடை அணிந்து கோல்டு பிரேமுடன் கூடிய சன்கிளாஸ்கள் மற்றும் கருப்பு முகமூடி அணிந்திருந்தார். ஆனாலும் அவர் விமான நிலையத்தில் நடந்து செல்லும் போது மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர்.

நடிகை ராஷ்மிகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துச் சிறப்புப் புகைப்பட டிசைனும் வெளியிட்டார். அதில்,மனித நேயத்துக்கு மிகிச் சிறந்த உதாரணம் நீங்கள். உங்களின் 70வது பிறந்த நாளில் சிறப்பு சிடிபி வெளியிடுவது எனக்கு கிடத்தக் கவுரவம். தொடர்ந்து எங்களைப் போன்றவர்கள் சிறந்த நடிகராகவும் சிறந்த மனுதாரராகவும் வருவதற்கு தொடர்ந்து எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

ராஷ்மிகா சமீபகாலமாகக் கதர் ஆடைகளுக்கு ஆதரவாகப் பேசியும், இணையத்தளத்தில் மெஜேச் பகிர்ந்தும் வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஒரு மெசேஜில். காந்திஜி காலத்திலேயே காதி ஆடைகள் சற்று விலை அதிகம்தான். ஆனாலும் மக்கள் அதனை வாங்கி அணிகிறார்கள். நாமும் காதி ஆடைகளான கதர், கைத்தறி துணிகளை உடுத்துவோம். அதன் மதிப்பு, கைத்திறன், நியாய விலை, கிராமப்புற பொருளாதாரம், மாசில்லாதவை ஆகியவற்றை மனதில் கொள்வோம். ஆதரியுங்கள் கதர் ஆடைகளை எனத் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா தற்போது சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் ஜோடியாக நடிக்கிறார். இப் படம் கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்டு, சிவப்பு மணல் கடத்தலைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக சித்தூர் உச்சரிப்பைக் கற்றுக் கொண்டார் ராஷ்மிகா. தவிர, கிஷோர் திருமாலாவின் ஆதல்லு மீகு ஜோஹர்லு படத்தில் ஷர்வானந்த் உடன் இணைந்து நடித்தார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்