பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் இதுவரை வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றனர். காந்தி தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின், நடிகைகள் சாவித்ரி வாழ்க்கையாக உருவான நடிகையர் திலகம், சில்க் ஸ்மிதா வாழ்க்கையாக உருவான தி டர்ட்டி பிச்சர், குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகிய பல வாழ்க்கை சரித்திர படங்கள் வெற்றி பட்டியலில் இணைந்தது.
சமீபத்தில் ஒடிடியில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பு பெற்றதுடன் கூகுல் இணைய தள பட்டியலில் அதிகம் பார்த்த படத்துக்கான 2வது இடத்தை சூர்யாவின் 'சூரரைப்போற்று' படம் இடம் பிடித்தது. ஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத் பற்றிய வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவானது. தற்போது மாதவன் இயக்கி நடிக்கும் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' விரைவில் வெளியீட்டிற்காகத் தயாராகி வருகிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையாக இது உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்தியப் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கடந்த சில நாட்களாகத் தகவல் பரவி வருகின்றன.இது குறித்து மாதவன் தனது இணைய தள பக்கத்தில்.இந்த செய்தி உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ரத்தன் டாடா பற்றிய வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரசிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த மாதவன், " துரதிர்ஷ்ட வசமாக இது உண்மையல்ல. சில ரசிகர்களின் விருப்பம் இதுபோன்ற எந்த திட்டமும் கூட இல்லை அல்லது அதுபற்றி விவாதிக்கப்படவும் இல்லை என்றார்.
இதற்கிடையில், நடிகர் மாதவன், 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார், அதில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விண்வெளி பொறியியலாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.நடிகர் மாதவன் தமிழில் மாறா என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் படப்பிடிப்பு நடக்கிறது. தவிர வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கிறார்.