மூக்கில் ரத்தம் வழிய பிணமாக கிடந்த நடிகை.. திரையுலகினர் அதிர்ச்சி

by Chandru, Dec 12, 2020, 16:03 PM IST

கொரோனா காலகட்டத்தில் திரையுலகினர் பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ். பி. பாலசுப்ரமணியன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார் சுமார் 50 நாட்களுக்கு மேலான சிகிச்சையில் கொரோனா தொற்று குணமானாலும் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

பாலிவுட்டில் நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான்கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா உள்ளிட்ட பலர் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். இவர்கள் தவிர பழம்பெரும் கன்னட இசை அமைப்பாளர் ராஜன், மராத்திய இசை அமைப்பாளர் நரேந்திர பிடே போன்றவர்களும் இறந்தனர். சமீபத்தில் தமிழ் டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்தார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மற்றொரு நடிகை மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் டர்ட்டி பிக்சர் மற்றும் லவ், செக்ஸ் அண்ட் தோகா படங்களில் நடித்தவர் ஆர்யா பானர்ஜி. பிரபல சிதார் இசைக் கலைஞர் நிகில் பானர்ஜியின் மகள் இவர். கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்தார் ஆர்யா பானர்ஜி. அவரது செல்ல நாயுடம் அவருடன் இருந்தது. ஆர்யா வீட்டுக்குத் தினமும் வேலைக்காரர் வருவார். அதுபோல் அவர் நேற்று வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் காலிங் பெல் அழுத்தியும் திறக்கவில்லை. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஆர்யா தனது படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தார். அவர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. அருகே சில மதுபாடில்கள் இருந்துள்ளன. ஆர்யாவின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆர்யா நிஜபெயர் தேவ்தத்தா பானர்ஜி சினிமாவுக்காக ஆர்யா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது மர்மமான சாவு என்று போலீசார் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். ஆர்யா பானர்ஜி மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து நடிகை பிடிதா பாக் தந்து இணையதள பக்கத்தில், ஆர்யா பானர்ஜி ஆன்மா சாந்தி அடையட்டும். மாடலிங் துறையில் இருந்த போது அவருடன் நான் அறையில் தங்கி இருந்திருக்கிறேன். அவர் மிகவும் சீனியர். கொல்கத்தாவில் பிரபல மாடல் அழகியாகத் திகழ்ந்தார். படப்பிடிப்பு காலங்களில் அவர் என்னை நிறைய ஊக்கப்படுத்தி இருக்கிறார். சிதார் இசை கலைஞர் நிகில் பேனர்ஜியின் மகள் ஆர்யா. திறமையானவர். அவர் நன்றாக நடனம் ஆடுவதுடன் பாடவும் தெரிந்தவர். நடித்துக் காட்டி எங்களை வியப்பில் ஆழ்த்துவார். உன்னை நிரந்தரமாக இழந்து வாடுகிறேன் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை