இளம் நடிகைகள் தற்போதெல்லாம் வெளிப்படையாகப் பேசத் தயங்குவதில்லை. காதல், கல்யாணம், மீ டூ பிரச்சனை, ஃபாய்பிரண்டுடன் டேட்டிங் விஷயங்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்கின்றனர். மகேஷ்பாபுடன் 1 நேனொ கடய்னே தெலுங்கு படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. இந்தியில் கபீர் சிங் படத்தில் நடித்து பிரபல ஆனார். இவர் தனது ஃபாய்ப்ரண்டை பெற்றோர் பிரித்த விஷயம் பற்றியும் முத்தம் தருவது பற்றியும் வெளிப்படையாகப் பேசினார்.
இதுபற்றி கியாராஅத்வானி கூறியதாவது:எனது குடும்பத்தை நான் அதிகம் நேசிக்கிறேன். அவர்களை பற்றிப் பேசினால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். என்னுடைய பாய்ஃ பிரண்டை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். சிறுவயதில் நான் எனது பாய்ஃபிரண்டுடன் ரொம்பவும் நெருக்கமாக இருப்பேன். அது எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை அவனிடமிருந்து என்னைப் பிரித்துப் படிப்பில் கவனம் செலுத்த வற்புறுத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை பாய்ஃபிரண்டுடன் டேட்டிங் செல்வதற்குத் தயங்கமாட்டேன் ஆனால் முதல் டேட்டிங்கில் கண்டிப்பாக நான் பாய்ஃ பிரண்டுக்கு முத்தம் தர மாட்டேன். தற்போதைக்கு நான் சிங்கிள்தான். எனக்கு மிகவும் பிடித்த இடம் மாலத்தீவு அங்கு ஸ்கூபா டைவிங் செய்வது மிகவும் பிடிக்கும் என்றார்.
உடல் தோற்றத்தை ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் எப்படி வைத்திருக்கிறீர்கள் என்கிறார்கள். அதற்குக் காரணம் எனது பழக்க வழக்கம் முக்கிய காரணம்.குறைந்த சோடியத்துடன் சீரான உணவை நான் எடுத்துக் கொள்கிறேன். நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களைச் சாப்பிடுவேன். சில துளிகள் எலுமிச்சையுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் காலையில் குடிக்கிறேன். பின்னர் ஒரு கிண்ணம் அளவு ஓட்ஸ் சாப்பிடுகிறேன். பருவத்தைப் பொறுத்து ஆப்பிள் மற்றும் வாழைப் பழங்கள் போன்ற பழங்களை எடுத்துக்கொள்கிறேன். பருவகால பெர்ரி மற்றும் ஆரஞ்சும் உண்பேன். இது காலை உணவாக வகைப் படுத்திக்கொண்டிருக்கிறேன்.மதிய வேலையில் வீட்டில் தயாரிக்கும் எளிய உணவை எடுத்துக்கொள்வேன். பருப்பு, சப்பாத்தி, கீரை, ஓக்ரா, பூசணி, மற்றும் முளை கடியப் பயிர் போன்ற சாப்பிடுவேன்.
இரவுவில் ஒமேகா -3 மற்றும் புரத உணவை உட்கொள்கிறேன். சால்மன் மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்கிறேன். வழக்கமாக வேர்க் கடலை வெண்ணெய்யில் நனைத்த ஆப்பிள்களின் துண்டுகள் எடுத்துக்கொள்வேன்.உடற்பயிற்சி மிகவும் முக்கியம் அதைத் தினமும் கடைப் பிடிக்கிறேன். ஜிம்மிற்கு செல்வது, நடனம் மற்றும் கிக் பாக்ஸிங் போன்ற உடல் செயல்பாடுகளை நான் செய்வேன். இவ்வாறு கியாரா அத்வானி கூறினார்.