ரஜினியை வைத்து அதிமுகவை அழிக்க சதி.. சி.வி.சண்முகம் ஆவேசம்..

ரஜினியை வைத்து அதிமுக, திமுக கட்சிகளை அழித்து விட சிலர் திட்டம் போடுகிறார்கள். அது நடக்காது. மக்கள் முட்டாள்கள் அல்ல என்று அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்கப் போவதாகவும், அது பற்றி டிச.31ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். தொடங்கப் போகும் கட்சிக்கு, பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநிலச் செயலாளர் அர்ஜுன மூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.

அந்த மூர்த்தியும் பாஜகவில் இருந்து விலகி வந்து விட்டார். ரஜினி அறிவிப்பைத் தொடர்ந்து, ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டியளிக்கையில், திமுக, அதிமுக கட்சிகளில் இருந்து பலரும் ரஜினி கட்சிக்கு வருவார்கள் என்று கூறியிருக்கிறார்.இந்நிலையில், விழுப்புரத்தில் அதிமுக கட்சியின் மகளிர் அணி, இளைஞர் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று(டிச.13) நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:நாட்டில் எந்த நடிகர் வந்தாலும் மக்கள் கூட்டம் கூடும். ஆனால், அந்த நடிகரின் ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் எல்லோருமே அவருக்கு வாக்கு அளிப்பார்களா என்றால் இல்லை. எல்லா நடிகரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது.

இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் தங்களை எம்ஜிஆர் என்று கூறிக் கொள்கிறார்கள். மக்களை முட்டாள்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.நடிகர்கள் யாரோ எழுதிக் கொடுப்பதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சுய சிந்தனை இல்லாதவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை மாற்றப் போகிறேன் எனச் சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் ஏதாவது இவர்களுக்குத் தெரியுமா? மக்களுக்காக ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறார்களா?என்னமோ, நாட்டை காப்பாற்றப் போவதாகச் சொல்கிறார்களே? கொரோனா பரவிய போது ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்தார்களா? தமிழகத்தில் சமூக நீதியை 50 ஆண்டு காலமாக அதிமுகவும், திமுகவும் கட்டிக்காத்து வந்திருக்கின்றன. அந்த சமூகநீதியைக் குலைப்பதற்கு அவர்களுக்கு ஒரு முகம் தேவை என்று சிலர் நினைக்கிறார்கள். தமிழகத்தில் சமூகநீதியை ஒழிக்க வேண்டுமென்றால் அதிமுகவையும், திமுகவையும் ஒழிக்க வேண்டும் என சிலர் ரஜினியை வைத்து திட்டம் தீட்டி வருகிறார்கள். அவர்கள் நினைப்பது நடக்காது.

இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :