வைர கம்லை தொலைத்த ரஜினி நடிகை.. தேடி தந்தால் பரிசு தருவதாக அறிவிப்பு..

by Chandru, Dec 14, 2020, 14:56 PM IST

தமிழில் பல நடிகைகள் அறிமுகமானதில் சில நடிகைகள் இந்தி படங்களுக்குச் சென்று பிறகு அங்கேயே முகாம் போட்டிருக்கின்றனர். 90களில் இந்திக்குச் சென்ற ஸ்ரீதேவி பாலிவுட்டில் முன்னணி இடத்தை பிடித்தார். அதேபோல் ரஜினியுடன் முரட்டுக்காளை படத்தில் நடித்த ரதி இந்தியில் நடிக்கச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். 2000ம் ஆண்டில் இந்தியில் நடிக்கச் சென்றார் அசின். அவரும் பாலிவுட்டிலேயே தங்கி அங்குள்ள தொழில் அதிபரைத் திருமணம் செய்துக் கொண்டார்.

நடிகை ஜெனிலியாவும் சில படங்கள் தமிழில் நடித்த நிலையில் இந்திக்குச் சென்றதுடன் ரிதேஷ் தேஷ் முக்கை மணந்துகொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களைப் போல் மற்றொரு நடிகை தமிழில் நடித்துவிட்டுச் சென்றவர் பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். ரஜினிகாந்த்துடன் நாட்டுக்கொரு நல்லவன் ஜோடியாக நடித்தவர் ஜூ ஹீ சாவ்லா. இவர் ரவிச்சந்திரனுடன் பருவராகம் படங்களில் நடித்துள்ளார். இவர் 90களில் இந்திக்கு சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

ஷாருக்கானுடன் இணைந்து சில படங்கள் தயாரித்தார். சர்மாஜி நம்கின் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் தான் தனது வைர கம்மலை தொலைத்து விட்டு கதறிக்கொண்டிருக்கிறார்.மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 8வது கேட் பக்கம் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியேறினேன் .பிறகு தான் என் காதில் நான் அணிந்திருந்த வைர கம்மலைக் காணவில்லை என்பது தெரிந்தது. யாராவது அதைக் கண்டுபிடித்தால் போலீசிடமோ அல்லது எனக்கோ தகவல் தெரிவித்தால் தகுந்த சன்மானம் தருவேன். அதை என் காதில் 15 வருடமாக நான் அணிந்து வருகிறேன் என்றார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்