சசிகுமாருக்கு இளம் நடிகைகள் இரட்டை ஜோடி..

by Chandru, Dec 14, 2020, 14:48 PM IST

கொரோனா கால ஊரடங்கு தளர்வில் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது தமிழ் திரையுலகம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும் பெரிய நடிகர்களின் படங்கள் தொடங்கப்படாமலே இருந்து கொரோனா தாக்கம் லேசாகக் குறைந்தது போல் தென்பட்ட பிறகே சமீபகாலமாகப் படப்பிடிப்புகள் சூடு பிடித்துள்ளன. கடந்த மாதம் அஜீத் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இன்று முதல் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது.

அதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் நேற்று சென்னையிலிருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றார். 2 தினங்களுக்கு முன் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இப்படத்தின் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இது அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறது.

இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகர் படத் தொடக்க விழா நடந்துள்ளது. சுப்பிரமணிய புரம் படத்தில் எண்ட்ரி கொடுத்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் எம்.சசிகுமார். இவர் நடிக்கும் புதிய படம் பகைவனுக்கு அருள்வாய். இப்படத்தை அனிஸ் இயக்குகிறார்.கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ (Monkeys Studio) தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது.“பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைத் திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக எம். சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி என் இரட்டை இளம் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார், கார்த்திக் கே தில்லை ஒளிப் பதிவு செய்கிறார். மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்கிறார். விஜய் தென்னரசு அரங்கம் அமைக்கிறார். தீனா நடம் அமைக்கிறார். ஆக்‌ஷன் நூர் சண்டை பயிற்சி அளிக்கிறார்.

You'r reading சசிகுமாருக்கு இளம் நடிகைகள் இரட்டை ஜோடி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை