இந்தியத் திரைப்பட விழா : புதுச்சேரியில் நாளை துவக்கம்

by Balaji, Dec 14, 2020, 21:10 PM IST

புதுச்சேரியில் நாளை இந்தியத் திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் வரும் 19-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு திரைப்படங்கள் இலவசமாகத் திரையிடப்படுகின்றன. புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2020, டிசம்பர் 15-ம் தேதி அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெறுகிறது.

16-ம் தேதி வங்கமொழித் திரைப்படம் 'ஜேஸ்தோபுத்ரா',
17-ம் தேதி மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு',
18-ம் தேதி தெலுங்குத் திரைப்படம் 'எஃப்2 -ஃபன் அண்டு ப்ரஸ்ட்ரேஷன்',
19-ம் தேதி இந்தி திரைப்படம் 'உரி த ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்'
ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

More Cinema News


அண்மைய செய்திகள்