காஜலுக்கு கல்யாணம் தமன்னாவுக்கு அதிர்ஷ்டம்.. திருமண திட்டம் தள்ளிவைப்பு..

by Chandru, Dec 15, 2020, 10:46 AM IST

சமீபகாலத்தில் ஹீரோயின்கள் சிலர் திடீர் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் புகுந்தனர். நடிகை காஜல் அகர்வால், மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான், மியா ஜார்ஜ், நிஹாரிகா இப்படி பலர் திருமணத்தை முடித்தனர். அவர்களின் திருமணத்தை பார்த்த தமன்னா குடும்பத்தினர், அவரையும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டு வருகின்றனர். பட வாய்ப்புகள் குறைவாக வருவதால் அவரும் திருமண எண்ணத்தில் இருந்தார். திடீரென்று தமன்னாவுக்குப் பட வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

தமிழில் கடைசியாக விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்தார் தமன்னா. அதன் பிறகு தமிழ்ப்படம் எதுவும் அவர் கைவசம் இல்லை. ஆனால் தெலுங்கில் அவருக்கு மளமளவென வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே கோபி சந்துடன் சீட்டிமார் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து சத்யதேவுடன் குருதுண்ட சீதா காலம், நிதின் உடன் அந்தாதுன் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்தியில் அந்தாதுன் படத்தில் தபு ஏற்று நடித்த வேடத்தை தமன்னா ஏற்கிறார்.

இதே படம் தமிழிலும் ரீமேக் ஆகிறது. இதில் பிரசாந்த் சிம்ரன் நடிக்கின்றனர். அந்தாதுன் இந்தியில் தபு ஏற்று நடித்த வேடத்தைத் தமிழில் சிம்ரன் ஏற்றிருக்கிறார்.தெலுங்கு சீனியர் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் எஃப் 3 புதிய படத்தில் தமன்னா ஒப்பந்தம் ஆகி இருப்பதுடன், தணிகல பரணி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். பட வாய்ப்பு மூலம் பண மழை கொட்டும் போது திருமணத்துக்கு என்ன அவசரம் என்று முடிவெடுத்திருக்கிறார் தமன்னா. மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் செட்டிலாகவும் எண்ணி உள்ளார். சமீபத்தில் தான் மும்பையில் ஆடம்பர பங்களா ஒன்றை தமன்னா வாங்கி இருக்கிறார்.

தமன்னாவுக்கு திடீரென்று பட வாய்ப்புகள் வருவதற்கு காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது. காஜல் திருமணத்துக்கு முன்பாக கமலுடன் இந்தியன்2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படங்களில் நடித்து வந்தார். திருமணம் முடிந்த நிலையில் சென்டிமென்ட்டாக அவரை ஒப்பந்தம் செய்ய சில இயக்குனர்கள் தயங்குகின்றனர். அந்த வாய்ப்பு தற்போது தமன்னாவின் அதிர்ஷ்டமாக மாறி இருக்கிறது.

You'r reading காஜலுக்கு கல்யாணம் தமன்னாவுக்கு அதிர்ஷ்டம்.. திருமண திட்டம் தள்ளிவைப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை