மேயாத மான் படத்தில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக நடித்தார். இப்படம் முடியும் நிலையில் பிரியாவிடம் எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்தாராம். அதை அவர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை சூர்யா மறுத்திருந்தார் அப்படி எதுவுமே நடக்காதபோது வேண்டுமென்றே யாரோ இப்படி வதந்தி கிளப்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் இருவரும் பொம்மை என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.எஸ்.ஜே.சூர்யாவுடன் கிசுகிசு வந்ததும் சில நாட்களில் பிரியா பவானி தனக்கு பாய்ஃபிரண்ட் இருப்பதாக தகவல் வெளியிட்டார். அவர் பெயர் ராஜவேல் ராஜ் என்றும் குறிப்பிட்டிருந்தார். இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது.
பின்னர் அவரது பாய் ஃபிரண்ட் மீது கோபமாக இருப்பதாக அவரே அறிவித்தார். 2 மாதத்துக்கு முன் பிரியா விமான நிலையம் செல்லும் போது கோபமாக இருப்பது போல் ஒரு படம் வெளியிட்டு பாய்ஃபிரண்ட் மீது கோபமாக இருந்தாலும் அவருடன்தான் செல்ல வேண்டி இருக்கிறது. என்று ஒரு மெசேஜும் வெளியிட்டார் பிரியா. பிரியா பவானி சங்கர் தற்போது கசட தபற, வான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இளம் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பிரியா பவானி, பல வெற்றி படங்களை தயாரித்த வரும் விநியோகம் செய்தவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.
புரடக்ஷன் நம்பர் 8 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் சதுரம்2 என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார். போபோ சசி இசை அமைக்கிறார். ராகுல் எடிட்டிங் செய்கிறார். துரைராஜ் கலை அமைக்கிறார். ஆர். தயாரிப்பு நிர்வாகம் செய்கிறார் முரளி கிருஷ்ணன். இதன் தொடக்கவிழா நடந்தது. அசோக்செல்வன், பிரியா பவானி சங்கர் மற்றும் படக் குழுவினர் பங்கேற்றனர்.