சுருட்டை வாயில் வைத்து ஹாட்டாக போஸ் கொடுக்கும் நடிகை..!

by Logeswari, Dec 15, 2020, 18:12 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் போன்ற பல படங்களில் முக்கிய புள்ளிகளுடன் நடித்து தமிழ் மக்களை கவர்ந்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. அங்கேயும் சென்று 'மெண்டல் மதிலோ' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தற்பொழுது தெலுங்கிலும் முதன்மை கதாநாயகியாக விளங்கி வருகிறார். இவர் எடுத்த உடனே கதாநாயகி ஆகவில்லை. முதலில் இவர் மாடல் அழகியாக இருந்தவர்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் சூழ்ந்ததால் சினிமாவை நோக்கி இவரது பயணம் தொடங்கியது. இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்க கூடியவர். எங்கு சென்றாலும் அதை தனது ஸ்டோரியாக போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கவர்ச்சியாக பல போஸில் போட்டோஷூட் செய்து இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அவை ரசிகர்களிடையே பல பாராட்டுகளை குவித்தது. இந்நினையில் சுருட்டை வாயில் வைத்து ஹாட்டான போட்டோ வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் மாஸ் மேடம், செம கியூட்டாக இருக்கிறீர்கள் என பல பாசிட்டிவ் கமெண்ட்ஸை போட்டு தாக்கி வருகின்றனர்.

You'r reading சுருட்டை வாயில் வைத்து ஹாட்டாக போஸ் கொடுக்கும் நடிகை..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை