பிரபல பாடகி திருமணம் திடீர் தள்ளிவைப்பு..

by Chandru, Dec 16, 2020, 11:50 AM IST

திரையுலகில் மறுமணங்கள் பல முறை நடந்திருக்கிறது. பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் போன்ற சில முக்கிய நடசத்திரங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களிடம் விவகாரத்து பெற்று பிறகு மறுமணம் செய்துக்கொண்டனர். இளையராஜா இசையில் புண்ணியவதி படத்தில் உனக்கொருத்தி.. என்ற பாடல் பாடியதுடன் காதல் ரோஜாவே படத்தில் மீண்டும் இளையாஜா இசையில் நினைத்த வரம் என்ற பாடலையும், பத்ரி படத்தில் ரமணா கோகுலா இசையில் காதல் சொல்வது என்ற பாடலும் பாடியவர் சுனிதா. தெலுங்கு படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியிருப்பதுடன் கன்னட படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இவர் கிரண் குமார் என்பவரை தனது 10வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆகாஷ் மற்றும் ஸ்ரேயா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரேயா தற்போது சினிமா பாடகியாகி இருக்கிறார்.

கிரண்-சுனிதா சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது சுனிதாவுக்கு 42 வயது ஆகிறது. இந்நிலையில் சுனிதாவுக்கும், மீடியா சி இ ஓ அதிகாரி ராம் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. அவரும் விவாகரத்து பெற்றவர். ஆனால் குழந்தைகள் யாரும் இல்லை. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். குடும்பத்தினர் இதற்கு சம்மதித்தனர். சுனிதாவின் மகன், மகளும் அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுனிதா-ராம் திருமண நிச்சயார்த்தம் நடந்தது. இந்த மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் திருமணத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா என பரப்பரப்பு ஏற்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு இருவரும் புதிய வீட்டில் வாழ முடிவு செய்துள்ளனர்.

தற்போது வீடு கட்டி வருவதால் அது கட்டி முடித்து தயார் ஆன பிறகு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். எனவே இந்த மாதம் நடக்கவிருந்த இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு சுனிதா தொடர்ந்து படங்களில் பாடல்கள் பாடவும் முடிவு செய்திருக்கிறார். அத்துடன் டிவி ஷோக்களில் பங்கேற்கவும் எண்ணி இருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்யும் சுனிதா கூறும்போது, எனது பிள்ளைகள் அருமையானவர்கள். அவர்களை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ராமை நான் சந்தித்தேன். அவர் எனக்கு உற்ற துணையாக இருக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் எங்கள் திருமணம் நடக்கும் என்றார் சுனிதா.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்