ரகுலுக்கு ஆடம்பர வீடு பரிசு தந்தது யார்? நேருக்கு நேராக பிரபல நடிகை கேள்வி..

by Chandru, Dec 16, 2020, 11:52 AM IST

நடிகர் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்தியில் நடிக்கச்சென்றார். அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராவிட்டாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்கிறார். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் மே டே என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ரகுல். இதில் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அது பற்றி கூறிய ரகுல் எனது கனவு இப்படத்தில் நனவாகிறது. அமிதாப்புடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இப்போது பலித்திருக்கிறது என்றார். ரகுல் ப்ரீத் தெலுங்கு படத்தில் நடித்தபோது நடிகர் ரானாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இருவருக்கும் காதல் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன் ரானா தந்து காதலி மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து ரகுல் உடனான கிசுகிசு முடிவுக்கு வந்தது. தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது ரகுலுக்கு முக்கிய நபர் ஒருவர் ஆடம்பர வீடு பரிசாக அளித்தாக கூறப்பட்டது. அதுபற்றி தற்போது பதில் அளித்திருக்கிறார். நடிகை சமந்தா நடத்தும் ஷோவில் ரகுல் ப்ரீத் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சமந்தா நேரடியாக உங்களுக்கு ஆடம்பர வீடு பரிசாக யாரோ தந்தாக கூறப்படுகிறதே என்றார். அதற்கு பதில் அளித்த ரகுல், அதுவொரு கட்டுக்கதை. யாரும் எனக்கு வீடு பரிசளிக்கவில்லை என்றார். இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு ரகுல் பதில் அளித்திருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் போதை மருந்து விவகாரத்தில் இணைத்து பேசப்பட்டார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இந்த வழக்கில் அவரது காதலி ரியா மீது புகார் அளிக்கப்பட்டது. போதை மருந்து கொடுத்து சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போதை மருந்து தடுப்பு போலீசார் ரியாவை கைது செய்து விசாரித்து சிறையில் அடைத்தனர். அப்போது அவர் தந்த வாக்குமூலத்தில் ஷர்த்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் போன்ற சிலரின் பெயர்களை குறிப்பிட்டார். அதன்பிறகு ரகுல் ப்ரீத்தை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்