நடிகைக்கு பாலியல் தொல்லை தந்த இயக்குனர் கைது..

by Chandru, Dec 18, 2020, 15:04 PM IST

திரையுலகில் நடிகர்கள் பலர் தங்களுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே பகிரங்கமாக கூறி வருகின்றனர். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்த தனுஸ்ரீ தத்தா, தான் இந்தி படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் மற்றும் அப்பட இயக்குனர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக மும்பை போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தனுஸ்ரீ தத்தா திடீரென்று வெளிநாடு சென்றார்.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மும்பை திரும்பி வந்தபோது பகீர் தகவல் வெளியிட்டார். நானா படேகர் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்ததால் அவரது அடியாட்கள் என்னைய்யும் என் குடும்பத்தையும் மிரட்டினார்கள் அதற்கு பயந்து வெளிநாடு சென்றுவிட்டேன். நான் மன உளைச்சலுக்குள்ளானேன். என் மனதை ஆன்மிக வழியில் திருப்பி பிரார்த்தனையில் ஈடுபட்டேன். அதுதான் எனக்கு நிம்மதி அளித்தது என்றார்.

தனுஸ்ரீ தத்தா மீ டு புகார் கூறியதையடுத்து டாப்ஸி உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் ரீதியாக தரப்பட்ட தொல்லைகள் குறித்து பகிரங்கமாக தகவல் பகிர்ந்தனர்.இந்நிலையில் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக ஒரு இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். சோழிங்க நல்லுரை சேர்ந்தவர் ரஞ்சித். வெப் சீரிஸ் இயக்குனர் என்று கூறப்படுகிறது. இவர் மீது விருகம்பாக்கத்தில் வசிக்கும் நடிகை சுவேதா என்பவர் கன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். பின்னர் இதுகுறித்து அடையார் டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் விக்ரமிடம் நடிகை புகார் அளித்தார்.

அவர் இதுபற்றி விசாரணைக்கு அவர் உத்தரவிட்டார். நடிகைக்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ரஞ்சித்தின் உதவியாளர் ஒருவர் சுவேதாவிடம் தூது சென்று ரஞ்சித்தை காதலிக்கும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்தார். அவரையும் அவரை எச்சரித்து அனுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை