நடிகர் பெயரை பயன்படுத்தி புதுமுகங்களை ஏமாற்றும் கும்பல்.. ஹீரோ எச்சரிக்கை..

by Chandru, Dec 18, 2020, 16:28 PM IST

சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் பல புதுமுகங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இதில் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகிறனர். இதுபோன்ற ஏமாற்றுவேலை பல மொழி படங்களில் நடக்கிறது. தமிழில் பிரபல நடிகர் ஒருவர் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்று வேலை நடப்பது அம்பலமாகி உள்ளது. வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமானவர் விஷ்ணுவிஷால். இவர் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் புதுமுகங்களுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் பிரபல படநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு உங்களை நடிக்க வைக்க எண்ணம் உள்ளது. நல்ல டெக்னிஷியன் குழு இருக்கிறது.

நீங்கள் சில அட்ஜெட்மென்ட் செய்ய வேண்டும். இப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார் என்று அந்த மெசேஜுல் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இந்த விஷயம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த விஷ்ணு விஷால் .இதுபோன்ற போலி மெசேஜை குறிப்பிட்டு புதுமுகங்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார். அதில், 'என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி இப்படி தவறான மெசேஜ் அனுப்புவதாகத் தெரிய வந்துள்ளது.

எனவே புதுமுகங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நான் இப்போது நடிக்கும் படங்கள் என்னுடைய தயாரிப்பில் தான் உருவாகின்றன. வெளிப்படத்தில் நடிக்கவில்லை. இது தொடர்பாகப் போலீசில் புகார் செய்ய உள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷால் ஏற்கனவே ரஜினி என்பவரைத் திருமணம் செய்தார். இவர் இயக்குனர், நடிகர் கே. நட்ராஜின் மகள் ஆவார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் விவாகரத்து பெற்றார் விஷ்ணு.

தற்போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரைக் காதலிக்கிறார். இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. விஷ்ணு விஷால் தற்போது ஜகஜால கில்லாடி, எப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

You'r reading நடிகர் பெயரை பயன்படுத்தி புதுமுகங்களை ஏமாற்றும் கும்பல்.. ஹீரோ எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை