பிரபல நடிகை மாலத்தீவில் அரட்டை கச்சேரி.. சிக்கலில் சிக்கிய ஹீரோயின்..

by Chandru, Dec 19, 2020, 13:05 PM IST

பிகினி ஷூட் மேஷ்-அப் ஒன்று கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்கள் கூட இந்த பாடலை வேடிக்கையாக பகிர்ந்து கொள்கின்றனர். நடிகை டாப்ஸி, யஷ்ராஜ் முகத்தேவின் பிக்ஜினி ஷூட் மாஷப்பை பார்த்து அதைத் தனது சகோதரிகளுடன் சேர்ந்து நடித்தார். தற்போது, ​​கோலிவுட் நடிகை சஞ்சிதா ஷெட்டி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இதேபோல் மாஷப் எடுத்துப் பகிர்ந்திருக்கிறார். சஞ்சிதா ஷெட்டி விடுமுறை பயணமாக குடும்பத்துடன் மாலத்தீவு சென்றார். அங்குத் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மாஷப் அரட்டை கச்சேரி நடத்தி இருக்கிறார். செல்போனில் இதனை அவரே படமாக்கி இயக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

குடும்பமே வேடிக்கையாகப் பீச்சில் ஆட்டம் போடுகிறது.சஞ்சிதா தனது சமூக ஊடக பக்கத்தில், இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அவரும் வீடியோவில் மற்றும் நடன மாடியுள்ளார்.தனது சமூக ஊடக பக்கத்தில் வீடியோவைப் பகிரும்போது, விடுமுறை பயணத்தில் இருப்பதாகவும், குடும்பத்துடன் ஒரு வேடிக்கையான நேரத்தை அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்து அவர்களை நடிகர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். "நடிகர்களுக்குச் சிறப்பு நன்றி. அம்மா, அப்பா, சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் நான். இந்த வீடியோ 30 நிமிடங்கள் மொபைலில் படமாக்கப்பட்டது என்று சஞ்சிகை கூறி உள்ளார்.

சஞ்சிதா ஷெட்டி தமிழில் தில்லாலங்கடி, கொலைகாரன், சூது கவ்வும். ரம். எங்கிட்ட போதாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் பாடங்களில் நடிக்கிறார். சஞ்சிதா சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். கார்த்திகை திருநாளையொட்டி சஞ்சிதா திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றும் இடத்துக்கு அவர் சென்று வழிபட்டார். அதை வீடியோவாக பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையானது. கொரோனா காலகட்டத்தில் தீப திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் மலை மேல் ஏறுவதற்கும் யாருக்கும் அனுமதி கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் விதி முறைகளை மீறி சஞ்சிதா மலை உச்சிக்குச் சென்றது எப்படி? அவரை அவ்வளவு உயரத்துக்கு அழைத்துச் சென்றது யார் ?என்ற கேள்வி எழுத்துள்ளது. இதுகுறித்து சிலர் புகார் அளித்து சஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டிருக்கின்றனர்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்