கமல்ஹாசன் நடிகையை குறி வைக்கும் நெட்டிஸன்கள்.. கணவரை தீவிரவாதி என்பதா?

by Chandru, Dec 19, 2020, 15:30 PM IST

நடிகைகள் பெரும்பாலும் இணைய தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார்கள். தங்களது சொந்த விஷயம் முதல் சமுதாய கருத்துக்கள் வரை பகிர்ந்துக் கொள்கின்றனர். சில சமயம் ஹேக்கர்கள் அவர்களது வலைத் தள பக்கத்தை முடக்கி தவறான விஷயங் களை பதிவு செய்கின்றனர். இதனால் அந்த நடிகைகள் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். இப்படித்தான் பூஜா ஹெக்டே இன்ஸ்டகிராமில் ஹேக்கர்கள் நுழைந்து சமந்தா படத்தை வெளியிட்டு இவர் ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று மெஜேச் போட்டனர்.

இதனால் பூஜா ஹெக்டே மீது சமந்தா ரசிகர்கள் வசை மாரி மொழிந்தனர். பிறகு பூஜா அதற்கு விளக்கம் அளித்தார். இந்த தவறை ஹேக்கர்கள் செய்தது என்றார். கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் இணைய தள கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர். இதையறிந்து வரலட்சுமி ரசிகர்களை முன்னதாகவே தனது கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது என்று எச்சரித்தார். பிறகு போராடி அந்த கணக்கை மீட்டார். அதேபோல் இணையதளத்தில் விஐபிக்களின் வாழ்க்கை குறிப்பு விக்கிப்பீடியாவில் இடம் பெறுகிறது. அதிலும் சில குறும்புக்காரர்கள் நுழைந்து மாற்றங்கள் செய்கிறார்கள்.

கமலுடன் இந்தியன் படத்தில் நடித்தவர் ஊர்மிளா. இந்தியில் பூட். ஏக் அசீனா எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பிலிருந்து விலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எம் பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் நடிகை கங்கனா ரானவத் சில பிரச்சனைகளைச் சமீபத்தில் எழுப்பினார். மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்பதாகக் கூறினார். இது மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனாவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கங்கனாவை எதிர்த்து கட்சியினர் போராட்டம் செய்தனர். அந்த நேரத்தில் கங்கனாவை எதிர்த்து ஊர்மிளா அறிக்கை வெளியிட்டார். இது சிவசேனா கட்சியினருக்கு ஆதரவாக அமைந்தது. இந்நிலையில் சிவசேனா கட்சியில் சேர அவருக்கு அழைப்பு வந்தது. அத்துடன் சட்டமேலவை உறுப்பினர் பதவியும் அளிக்கப்பட்டது. அதை ஏற்று காங்கிரசிலிருந்து விலகி சிவசேனா கட்சியில் சேர்ந்தார் ஊர்மிளா.

இந்நிலையில் ஊர்மிளாவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவரை பற்றி நெட்டிஸன்கள் கடுமையாகத் தாக்கி தகவல் வெளியிட்டு வருகின்றனர். அவரது சமூக வலைத் தள கணக்கையும் ஹேக்கர்கள் முடக்கினர். ஊர்மிளாவின் கணவர் ஒரு முஸ்லிம் அவர் ஒரு பயங்கர வாதி என்று கடுமையாக எழுதினர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மிளா வம்பிழுக்கும் நெட்டிஸன்களுக்கு பதிலடி கொடுத்தார். என் கணவர் மோஷின் அக்தர். முஸ்லிம் என்று எழுதுகிறார்கள். அவர் காஷ்மீர் முஸ்லிம். நாங்கள் இருவரும் அவரவர் மதங்க ளை சமமாக மதிக்கிறோம் பின்பற்றுகிறோம். ஆனால் அவரை தீவிரவாதி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். மேலும் எனது விக்கிபிடியாவில் நுழைந்து எனது அம்மா பெயரை ருஷனா அகமது, அப்பா பெயரை ஷிவிந்தர் சிங் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனது அம்மா பெயர் சுனிதா, அப்பா பெயர் ஸ்ரீகாந்த் மடோன்கர். வம்பிழுக்கும் நெட்டிஸன்கள் என் குடும்பத்தையும் என் கணவர் குடும்பத்தையும் குறி வைக்கிறார்கள்.இவ்வாறு ஊர்மிளா கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading கமல்ஹாசன் நடிகையை குறி வைக்கும் நெட்டிஸன்கள்.. கணவரை தீவிரவாதி என்பதா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை