Advertisement

கடுமையான ஆக்ஷன் ஷுட்டிங்கை முடித்த புற்றுநோய் பாதித்த நடிகர்..

கன்னட நடிகர் யஷ், கேஜி எஃப் சேப்டர் படம் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்தி, தெலுங்கு. இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அறிமுகமானார். அப்படம் எல்லா மொழிகளில் வசூல் சாதனை புரிந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காலகட்டத்துக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் இந்தி நடிகர் சஞ்சய்தத் வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார். கொரோனா ஊரடங்கில் சஞ்சய் தத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்தது. ஆனால் அவரது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நடிப்பிலிருந்து ஒதுங்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சையில் இருந்த போது அவர் உடல் மெலிந்து பரிதாபமான தோற்றத்துக்குச் சென்றார். இதனால் கே ஜி எஃப் சேப்டர் 2 படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சில மாத சிகிச்சைக்குப் பிறகு தான் குணமானதாகத் தெரிவித்த சஞ்சய் தத், கே ஜி எஃப்2 ஷூட்டிங்கிற்கு தயாராகி விட்டதாக அறிவித்தார்.

ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடந்தது. அதில் பங்கேற்க சஞ்சய் தத் ஐதராபாத் வந்தார். கடந்த 2 வாரமாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. சஞ்சய் தத் உடல்நிலையைக் கருதி அவர் நடிக்கும் ஆக்‌ஷன் கட்சிகளில் டூப் பயன்படுத்த இயக்குனர் எண்ணினார். அதை சஞ்சய் தத் ஏற்கவில்லை. தானே நடிப்ப தாக கூறினார். இதையடுத்து யஷ் உடன் சஞ்சய்தத் மோதும் பயங்கர சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. யஷ்ஷை இறுக்கி கட்டிப்பிடிக்கும் காட்சியில் அவரை கரடி பிடியாக சஞ்சய் தத் பிடித்தார். இதில் சஞ்சய் தத் அணிந்திருந்த கருப்பு நிற மேக் அப் யஷ் டி ஷர்டில் ஒட்டியது. அதைக் குறிப்பிட்டு மெசேஜ் வெளியிட்டார் யஷ். சஞ்சய்தத் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்பது இதில் தெரிகிறது எனப் படக் குழுவினர் தெரிவித்தனர். தற்போது கே ஜி எஃப் 2 ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்தது. சஞ்சய்தத்துக்கு விடை கொடுத்து வழி அனுப்பியது.

இதுகுறித்து பட இயக்குனர் பிரசாந்த் நீல் சமூக வலைத்தளத்தில் கூறியது:நடிகர் சஞ்சய் தத் என்கிற பாபா இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். சஞ்சய் தத்துக்கும் யஷுக்கும் இடையிலான அதிரடி காட்சிகள் பான் இந்தியன் படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அப்டேட் விரைவில் தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்றார்.

READ MORE ABOUT :